ஒருவருமில்லை

என்னைக் குளத்தில் கொண்டுபோய் விடுகிறதற்கு ஒருவருமில்லை.

Sir,I have no man to put me into the pool when the water is stirred up. (John 5:7)
Act14:8f;(3:2); Ro5:6; 1Co9:24; 2Co1:8-10; Deu32:36; Job19:7; Ps72:12-14; Ps142:4; Isa59:16; Lam1:2,21.

அதற்கு வியாதிஸ்தன்: ஆண்டவரே, தண்ணீர் கலக்கப்படும்போது என்னைக் குளத்தில் கொண்டுபோய் விடுகிறதற்கு ஒருவருமில்லை, நான் போகிறதற்குள்ளே வேறொருவன் எனக்கு முந்தி இறங்கிவிடுகிறான் என்றான். (யோவான் 5:7)

அப்போட14:8f;(3:2); ரோமர் 5:6; 1கொரிந்தியர் 9:24; 2கொரிந்தியர் 1:8-10; உபாகமம் 32:36; யோபு 19:7; சங்கீதம் 72:12-14; சங்கீதம் 142:4; ஏசாயா 59:16; புலம்பல் 1:2,21.

உதவி செய்வார் ஒருவருமில்லை:

மனிதன் தேவனால் சிருஷ்டிக்கப்பட்டவன். தேவனின் குணங்களையுடையவன். தேவனோடு நல்ல ஐக்கியமுள்ளவன்.

பாவம் வந்தபோது பகை, பிரிவினை, கசப்பு, வெறுப்பு, ஒதுங்கிபோகுதல், கண்டுக்காது இருத்தல் போன்ற ஐக்கிய சீர்கேடுகள் உண்டாயிற்று.

நியாயபிரமாணம் மனிதர்க்குள் ஒற்றுமையை ஏற்படுத்தவில்லை. ஆனால் ஒற்றுமை உண்டாக்கும் கிறிஸ்துவை நியாயபிரமாணமே கொடுத்தது.

கிறிஸ்துவின் சபையானது மொழி கடந்து, ஜாதி கடந்து, நிறம் கடந்து, தேச பற்று கடந்து ஒன்றித்து செல்லவே கிறிஸ்துவின் இரத்தத்தால் மீட்கபட்டது. இந்த ஒன்றிப்பில் முக்கியமானது உதவி செய்தல் ஆகும்.

– கீழே விழுந்த கழுதையை மனிதன் தூக்கி விடுகிறான். சக மனிதனை எட்டி உதைக்கின்றான்.
– கொல்லும் பாம்புக்கு பால் வார்க்கின்றான். சொல்லும் மனிதனுக்கு விஷம் வார்க்கின்றான்.
– கால்நடைகளுக்கு கால்கோள்விழா எடுக்கின்றான். அதை வளர்க்கும் மனிதனை காலனிடம் அனுப்புகின்றான்.
– மிருகங்களுக்கு, பறவைகளுக்கு சரணாலயம் வைத்து அழகாக பரிதீலிக்கின்றான். இயலா மனிதனுக்கு விடுதி வைத்து கொள்ளையடிக்கின்றான்.
– மொழி வளர்க்க, மதம் வளர்க்க, ஜாதி வளர்க்க, கட்சி வளர்க்க பணத்தை வாரி இறைக்கின்றான். மனிதனை வளர்க்க அவனிடம் இருப்பதையே பிடுங்குகின்றான்.
– வாழும்போது மனிதனை மதிக்காமலும், நேசிக்காமலும், அவனுக்கு உதவாமலும் இருந்துவிட்டு, அவன் மாண்டபின்பு கல்லறையில் பாலூற்றுதலும், கல்லறையை அழகு படுத்துதலும், சிலை வைப்பதிலும் கவனம் செலுத்தி கைதட்டல் வாங்குகின்றான்.
– கொலை செய்பவனுக்காய் கொடி பிடிக்கின்றான். கொல்லப்பட்டவனின் குடும்பத்தை கண்டுக்காமல் இருக்கின்றான். இது சாபமாகும்.
– கல்வியும், மருத்துவமும் சேவைக்காகவே அறிமுகப்படுத்தபட்டது. இன்றோ இவையிரண்டையும் வைத்து உலக பணக்காரனாகின்றான்.
– அறிவு வளர்ச்சி மனிதாபிமானத்துக்கும், மனசாட்சிக்கும் உரம்போடுவது மாறி மொழி பாகுபாட்டிலும், ஜாதி பாகுபாட்டிலும், மத பாகுபாட்டிலும் புகுத்தி வன்முறை வெறியாட்டம் நடத்துகிறான்.
– குழந்தைகளை நேசிக்கும் மனித சமுதாயம் வயதான பெற்றோர்களை நிராதரவானவர்களாக மாற்றும் கொடுமை இங்குதான் அரங்கேறுகிறது.
– உதவி செய்ய பணிக்கப்பட்ட கிறிஸ்தவம் உண்டியலையே சுற்றி சுற்றி வருகிறது.
– பணமல்ல, மனமே உதவி செய்ய தேவை. இன்னும் பல.சிந்திப்பீர் மனுக்குலமே.
உதவி செய்யாவிட்டாலும் பரவாயில்லை. உபத்திரவப்படுத்தாதே.
தூக்கிவிடமுடியாவிட்டாலும் பரவாயில்லை, துரத்தி விடாதே.
வயதான பெற்றோரை கைவிடாதே. அவர்களின் அந்திம காலத்தில் அவர்களுக்கு தேவையான கால்வயிறு கஞ்சியும், கட்டிக்க ஒரு துணியும், ஒட்டிக்க ஒரு மறைவிடமும் கொடுத்து காப்பாற்று. நீ நன்றாயிருப்பாய்.

மனித உதவியில்லாத இந்த மனிதன் தேவ உதவி பெற்றான்.

கர்த்தாவே, மனிதனுக்கு கைகொடுப்பதற்காக எல்லாவற்றையும் விட்டு பூவுலகம் வந்தீர். உம்மை பின்பற்றிய நாங்கள் எல்லாம் பெற்றிருந்தும் (கல்வி, மருத்துவம், பணம், ஆஸ்தி, பதவி) மனிதனுக்கு கைக்கொடுக்க முன் வராதிருக்கின்றோம். எங்களை மன்னியும். நன்மை செய்கிறவராக சுற்றி திருந்த இயேசுவை பின்பற்றிய தெரசா அம்மையாரை போல நாங்களும் பிறருக்கு கைக்கொடுத்து வாழ எங்களுக்கு உதவிடும்.

ADD YOUR COMMENT

Powered By Indic IME