நீ தேவனுடைய குமாரனிடத்தில் விசுவாசமாயிருக்கிறாயா?
when He had found him,He said to him,Do you believe in the Son of God? ( John 9:35)
Jn1:49,50; Jn3:15-18,36; Jn6:69; Jn11:27; Jn20:28,31; Act8:37; Act9:20; 1Jn4:15; 1Jn5:5,10,13,20.
அவனை அவர்கள் புறம்பே தள்ளிவிட்டதை இயேசு கேள்விப்பட்டு, அவனைக் கண்டபோது: நீ தேவனுடைய குமாரனிடத்தில் விசுவாசமாயிருக்கிறாயா என்றார். (யோவான் 9:35)
யோவான் 1:49,50; யோவான் 3:15-18,36; யோவான் 6:69; யோவான் 11:27; யோவான் 20:28,31; அப்போஸ்தலர் 8:37; அப்போஸ்தலர் 9:20; 1யோவான் 4:15; 1யோவான் 5:5,10,13,20.
விசுவாசமாயிருக்கிறாயா?
பார்வைபெற்ற மனிதனாகிய நீ தேவனுடைய குமாரனிடத்தில் விசுவாசமாயிருக்கிறாயா என்று இயேசு கிறிஸ்து கேட்கின்றார்.
வீட்டைவிட்டும் சமுதாயத்தை விட்டும், புறம்பாக்கபட்ட இந்த பிறவி குருடன் இயேசுகிறிஸ்துவின் கேள்வியை எதிர்பார்த்திருக்க மாட்டான்.
ஆர்வ கோளாறினால் இயேசுவை பின்பற்றியோ, அரைகுறை விசுவாசத்தினாலேயோ, நன்றியுள்ள இருதயத்தினிமித்தமோ வீட்டைவிட்டு வெளியேறாமல் இயேசுவை முழுவதுமாய் நம்பியதினால் வீட்டைவிட்டு வெளியேறினான் என்று அறியும்படியாகவே இக்கேள்வியை கேட்டார்.
மேலும் இயேசுகிறிஸ்துவின்மேல் விசுவாசமாயிருக்கிறாயா என்று கேட்காமல் தேவனுடைய குமாரனிடத்தில் விசுவாசமாயிருக்கிறாயா என்று கேட்டார்.
பிதாவின் குமாரனாக – நேச குமாரனாக – கீழ்படிதலின் குமாரனாக – தேவ குமாரனாகவே வந்தவரை நம்புவதுதான் விசுவாசத்தின் அடித்தளம்.
சுவிசேஷங்களின் பிரதானமான நோக்கம் என்னவெனில் இயேசுவை தேவனுடைய குமாரனாக வெளிபடுத்துவதேயாகும்.
தேவனிடமிருந்து வந்த தேவகுமாரனால் மட்டுமே அற்புதங்களையும், அடையாளங்களையும் நடப்பிக்க இயலும்.
இயேசு தேவனுடைய குமாரனாக வெளிப்பட்டதினால் இயேசுவை விசுவாசிக்கின்ற யாவரும் தேவனுடைய பிள்ளைகளாகின்றனர். தேவனுடைய பிள்ளைகளாகின்றவர்கள் உலக அமைப்பிலிருந்து வெளியேற்றப்பட்டிருந்தாலும், தேவனுடைய அமைப்புக்குள் சேர்க்கப்படுகின்றனர். சபைக்குள் பிரவேசிக்க ஒரேவழிதான் உண்டு. அதாவது இயேசுவை தேவனிடமிருந்து வந்த தேவ குமாரன் என்று விசுவாசிப்பதேயாகும்.
தேவ குமாரன் இன்றேல் தேவ பிள்ளைகளும் இல்லை.
கர்த்தாவே உம்முடைய குமாரனாகிய இயேசு எங்களுக்கு தம்முடைய ஆவியை தந்து எங்களை உம் பிள்ளைகளாக ஆக்கியதற்காய் ஸ்தோத்திரம்.