முழுவதும் பாவத்தில் பிறந்த நீ எங்களுக்குப் போதிக்கிறாயோ

முழுவதும் பாவத்தில் பிறந்த நீ எங்களுக்குப் போதிக்கிறாயோ?

You were completely born in sins, and are you teaching us?.And they cast him out. (John 9:34)

Jn9:2,40; Jn7:48,49; Jn8:41; Lk11:45; Lk14:11; Lk18:10-14,17; Gal2:15; Eph2:3; 1Pet5:5; Ps51:5; Pr9:7,8; Pr26:12; Pr29:1; Isa65:5.

அவர்கள் அவனுக்குப் பிரதியுத்தரமாக: முழவதும் பாவத்தில் பிறந்த நீ எங்களுக்குப் போதிக்கிறாயோ என்று சொல்லி, அவனைப் புறம்பே தள்ளிவிட்டார்கள். (யோவான் 9:34)

யோவான் 9:2,40; யோவான் 7:48,49; யோவான் 8:41; லூக்கா 11:45; லூக்கா 14:11; லூக்கா 18:10-14,17; கலாத்தியர் 2:15; எபேசியர் 2:3; 1பேதுரு 5:5; சங்கீதம் 51:5; நீதிமொழிகள் 9:7,8; நீதிமொழிகள் 26:12; நீதிமொழிகள் 29:1; ஏசாயா 65:5.

எங்களுக்கு போதிக்க உனக்கேது தகுதி?
தேவன் ஆதியில் ஏதேன் தோட்டத்தில் வைத்து அன்றாடம் மனிதர்க்கு போதித்து வந்தார். பாம்பின் பேச்சை கேட்டு அவர்கள் அவைகளை தள்ளிவிட்டனர்.

பின்னர் மோசே மூலமாக இஸ்ராயேல் ஜனங்களுக்கு போதித்து வந்தார் தேவன். அதையும் இஸ்ராயேல் ஜனங்கள் தள்ளிவிட்டனர்.

அநேக தீர்க்கதரிசிகள், ஆசாரியர்கள், ரபீக்களை கொண்டும் போதித்தார். அதையும் தள்ளிவிட்டனர்.

முடிவில் தேவன் தமது மகனாகிய இயேசுகிறிஸ்துவினால் போதித்தார். அதையும் ஏற்றுக்கொள்ளாமல் அவரை கொலை செய்தனர். இதற்கிடையில் இயேசுகிறிஸ்துவினால் நன்மை பெற்ற இக்குருடனும் சத்தியத்தை சொல்லிப்பார்த்தான். இவனையும் புறம்பே தள்ளிவிட்டனர்.

சத்தியத்தை ஏற்றுகொள்ளாத இஸ்ராயேலர் இன்று வரையிலும் ஆலயம் இன்றி தவிக்கின்றனர்.

ஆதி அப்போஸ்தலர்கள், முதலாவது இஸ்ராயேலருக்கே போதித்தனர். அவர்களையும் புறம்பாக்கி கொலை செய்தனர்.
பரிசுத்த ஆவியானவரை கொண்டு போதித்தும் பயனில்லாத இஸ்ராயேலராகவே இருந்தனர். இஸ்ராயேலரை போலவே இக்கால திருச்சபையினரும் ஆவியானவரின் வார்த்தைக்கோ, விவிலிய வார்த்தைக்கோ செவி கொடுப்பதில்லை. பழுத்த அனுபவமிக்க, உண்மையுள்ள , பக்தியுள்ள ஊழியகாரர்க்கும் செவி கொடுப்பதில்லை. அவர்கள் ஆலோசனையையும் தள்ளிவிடுகின்ற ஒரு காலம் .

நீ என்ன எனக்கு போதிப்பது, எனக்கு எல்லாம் தெரியும் என்ற ஒரு மமதை போங்கு கிறிஸ்தவ தலைவர்களிடமும், விசுவாசிகளிடத்திலும் பெருகி வருகிறது. இதனால்தான் சபைகள் அந்நியர் வசம் கொஞ்சகாலத்துக்கு ஒப்புவிக்கப்படுகிறதோ?

மூத்தவர்களுக்கு மரியாதை கொடுப்பதில்லை. அதன் விளைவு அதிபயங்கரமாயுள்ளது.
விழிப்படைவீர்…
சாதுவடைவீர்….

கர்த்தாவே உம்முடைய போதனைகளுக்கு செவிகொடுத்து உண்மையுள்ள பிள்ளைகளாக வாழ உதவி செய்யும்.

ADD YOUR COMMENT

Powered By Indic IME