அநேகர் அவர்மேல் விசுவாசம் வைத்தார்கள்.
many of the Samaritans of that city believed in Him because of the word of the woman who testified. (John 4:39)
Jn2:11,22,23; Jn4:41,53; Jn8:30; Jn10:41,42; Jn11:45; Jn12:10,42; Jn20:25-31; Mt21:32.
நான் செய்த எல்லாவற்றையும் எனக்குச் சொன்னார் என்று சாட்சி சொன்ன அந்த ஸ்திரீயினுடைய வார்த்தையினிமித்தம் அந்த ஊரிலுள்ள சமாரியரில் அநேகர் அவர் மேல் விசுவாசமுள்ளவர்களானார்கள். (யோவான் 4:39)
யோவான் 2:11,22,23; யோவான் 4:41,53; யோவான் 8:30; யோவான் 10:41,42; யோவான் 11:45; யோவான் 12:10,42; யோவான் 20:25-31; மத்தேயு 21:32.
அநேகர்:
இயேசுவின் செய்தியை நேரடியாக கேட்டவர்கள் உண்டு, கண்டவர்கள் உண்டு, அனுபவித்தவர்களும் உண்டு. பின்சென்றார்கள் என்ற குறிப்புகள் யாவும் இந்த மூன்று நிலைகளுக்கும் உட்பட்டவர்கள்.
ஆனால், விசுவாசித்தவர்களின் நிலைப்பாடு என்னவாயிருந்தது?
சீஷர்கள் கூட ஒரு சூழலில் அவரை கைவிட்டு விலகிப்போயினர்.
அவர் தனித்து விடப்பட்டார். சுவிசேஷங்களில் விசுவாசித்தார்கள் என்று காணப்படுகிறவர்கள் இயேசுவின் மரணத்திலும் அவரை பின்பற்றினார்களா?
அவரோடு இருக்கும்படி தெரிந்துக்கொள்ளபட்ட சீஷர்களும் பின்வாங்கினர். ஆனால் யோசேப்பு, நிக்கோதேமு போன்ற சீஷர்கள் தங்களின் விசுவாசத்தைகாண்பித்தனர். யோவான் 19:38-42.
சில பெண்களும் தங்கள் விசுவாசத்தை கிரியைகளில் காண்பித்தனர். லூக்கா 24:1
ஆனால் பின்வாங்கின சீஷர்களும், மற்றுள்ளவர்களும் இயேசுவின் உயிர்த்தெழுதலுக்குபின் பரிசுத்த ஆவியை பெற்று பெரும் சாட்சிகளாய் நின்றார்கள்.
தங்கள் விசுவாசத்தை தங்கள் மரணத்தில் வெளிபடுத்தினர்.
தற்கால கிறிஸ்தவ உலகில் 4 வகையான விசுவாச பெருமக்கள் காணப்படுகின்றனர்.
1. வாய்சவாடல் விசுவாசம் – பெருமுழக்க விசுவாசம்.
பேசுவார்கள் செயல்படமாட்டார்கள். கிரியைகள் இல்லை.
தேவனுடைய இராஜ்ஜியம் பேச்சிலல்ல, பெலத்தில் உள்ளது.
2. கிரியைகளில் காணப்படும் விசுவாசம். விசுவாசத்தை தங்கள் நற்கிரியைகளில் வெளிப்படுத்துகிறார்கள். நற்கிரியைகளை செய்வதற்காகவே தேவன் நம்மை சிருஷ்டித்தார்.
3. பின்வாங்கிப்போகும் விசுவாசம். வசனத்தினிமித்தம் உபத்திரவம், துன்பம் உண்டானவுடனே இடறலடைந்து பின்வாங்கிப்போகிறார்கள்.
4. ஆவியினால் உரமேற்றபட்ட விசுவாசம். தன் ஜீவனையும் இழக்க துணிவுள்ள விசுவாசம். கிறிஸ்துவுக்காக தன் ஜீவனை இழக்க துணிவதே மேலானது.
கிறிஸ்துவின் உபதேசத்தில் பணக்கார விசுவாசம் – ஐசுவரிய விசுவாசம் என்று ஒன்றில்லை. ஆனால் அவைகள் தேவ இராஜ்ஜிய விரிவாக்க பணிக்காக அவரால் கொடுக்கப்படாமலிருப்பதுமில்லை.
– கண்டு விசுவாசிப்பதிலும்.காணாது விசுவாசிப்பதே மேல்.
– பட்டு விசுவாசிப்பதிலும்.படாமல் விசுவாசிப்பதே மேல்.
– கற்று விசுவாசிப்பதிலும். கேட்டு விசுவாசிப்பதே மேல்.
– பெற்று விசுவாசிப்பதிலும்.கொடுத்து விசுவாசிப்பதே மேல்.
அழைக்கபட்டவர்கள் அநேகர். தெரிந்துகொள்ளபட்டவர்களோ சிலர்.
அநேகர் விசுவாசிப்பர். இறுதிவரையிலும் பின்தொடர்வோர் சிலரே.
அந்த சிலரில் நாம் இருக்கின்றோமா? இல்லையெனில் விசுவாசத்தை வேரூன்றச் செய்யுங்கள்.
விசுவாசம் உலகோடு இணைந்ததல்ல. விசுவாசம் உன்னதரோடு இணைந்தது.
கர்த்தாவே, ஊனுக்கும், உணவுக்கும், மண்ணுக்கும், பொன்னுக்கும், வீடுக்கும், காடுக்கும் உம்மை நம்பி எங்கள் இறுதி நிலையை ஆட்டம் காண வைத்துவிட்டோம். உம்மோடு இறுதிவரையிலும் நிற்கும் விசுவாசமே எங்களுக்கு வேண்டும் என்பதை அறிந்தோம். எங்கள் விசுவாசத்தை வர்த்திக்கப் பண்ணும்.