அறுக்கிறவன் கூலியை வாங்கி, நித்திய ஜீவனுக்காகப் பலனைச் சேர்க்கிறான்.
he who reaps receives wages, and gathers fruit for eternal life. (John 4:36)
Lk16:9-12; Ro1:13; Ro6;22; 1Cor3:5-8; 1Cor9:19-23; gal6:6-10; Phil2:14-16; 1Tim4:16; 2Tim4:7,8; Jas3:18; Jas5:19,20; 2Jn1:8.
விதைக்கிறவனும் அறுக்கிறவனுமாகிய இருவரும் ஒருமித்துச் சந்தோஷப்படத்தக்கதாக, அறுக்கிறவன் கூலியை வாங்கி, நித்திய ஜீவனுக்காகப் பலனைச் சேர்த்துக்கொள்ளுகிறான். (யோவான் 4:36)
லூக்கா 16:9-12; ரோமர் 1:13;6; ரோமர் 22; 1கொரிந்தியர் 3:5-8; 1கொரிந்தியர் 9:19-23; கலாத்தியர் 6:6-10; பிலிப்பியர் 2:14-16; 1தீமோத்தேயு 4:16; 2தீமோத்தேயு 4:7,8; யாக்கோபு 3:18; யாக்கோபு 5:19,20; 2யோவான்1:8.
கூலிக்கு பலன்:
இங்கே உலக வேலை செய்து பெற்றுக்கொள்ளும் கூலியை கொண்டு நித்திய வாழ்வுக்கான – அழியாத வாழ்வுக்கான பலனை சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று இயேசு குறிப்பிடுகின்றார். அழியும் பொருளைகொண்டு அழிவில்லா பொருளை சம்பாதிக்க வேண்டும்.
இயேசுகிறிஸ்துவின் உபதேசம் – நோக்கம் – செயல்பாடுகள் யாவுமே Materialistic blessing சார்ந்ததல்ல. அவைகள் இவ்வுலக்த்தில் தாராளமாக உள்ளன. உலகம் அழிவது வரையிலும் அவைகள் இங்கே வைக்கப்பட்டுள்ளன.
அவைகளை நாம் நாடிதேட வேண்டாம். ராஜ்ஜியம், நீதி ஆகியவைகளை தேடும்போது உலகியல் நன்மைகள் தாராளமாய் கிடைக்கும்.
Materialistic Blessings are Automatic Blessings for Spiritual Christian.
ஆனால்
இந்த உலக நன்மைகள், கூலிகளை கொண்டு நாம் செய்ய வேண்டியது என்ன?
– தேவனுடைய இராஜ்ஜியம் கட்டப்பட வேண்டும்.
– ஆத்துமாக்கள் சம்பாதிக்கப்பட வேண்டும்.
– கிராமங்கள், பட்டணங்கள் தோறும் தொழுகை மையங்கள் – ஆலயங்கள் உருவாக்கப்பட வேண்டும்.
– ஊழியகாரர்களை அனுப்ப வேண்டும். அவர்களோடு ஒத்துழைக்க வேண்டும். அவர்களை அவர்களின் தோல்விகள், தடுமாற்றங்கள், பாடுகள், பயங்கள், தேவைகளில் தாங்க வேண்டும்.
– சுவிசேஷ பிரபல்யங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும்.
– ஜெபகுழுக்கள் உருவாக்கபட்டு தாங்கப்பட வேண்டும்.
இவ்விதமாக தேவ இராஜ்ஜிய விரிவாக்க பணியில் தங்கள் கூலியை – உலக பொருளை பயன்படுத்துவோர் கண்டிப்பாக கவனிக்கவேண்டிய சில ஒழுங்குகள் உண்டு.
– தாங்கள் சார்ந்துள்ள சபையோடுதான் பயணிக்க வேண்டும், பணி செய்ய வேண்டும்.
– செய்கின்றவைகளுக்கான பிரதிபலனை எவ்விதத்திலும், எந்த முறையிலும் ஏற்றுக்கொள்ளலாகாது.
– கொடுப்பதினால் உரிமைபாராட்டவோ, உத்தரவிடவோ, கட்டுப்படுத்தவோ அனுமதியில்லை. ஆலோசனைகள் வழங்கலாம்.
– கணக்கு கேட்கும் இடத்தில் நீங்கள் இருக்கலாகாது. சபை அதை கவனிக்க வேண்டும். மேலும் அதை அவர் பார்த்துக்கொள்வார்.
– ஒழுக்கவியல் சார்ந்தவைகளில் தனி கவனம் செலுத்தப்பட வேண்டும்.
கொடுப்பது உனது கடமை.
கடமை தவறினால் கிடைப்பது தடைபடும்.
அவர் உனக்கு தாராளமாக தருகிறார். உன்னை நம்பி அவர் தருகிறார்.
அவருக்கு நீ என்ன செய்யப்போகிறாய்?
நித்திய ஜீவனை சம்பாதிக்க அநித்தியமானவைகளை தாராளமாக செலவிடு.
இருப்பதை கொண்டு செய். இல்லாததை தேடிகொண்டிராதே.
வரப்போகிறதை நாடு.வராதிருப்பதை விட்டுவிடு.
நீ செய்ய முன்வா.
பிறர் வருவதை எதிர்பாராதே.
வரும்போதும் அவர்களை முற்றிலும் சார்ந்திராதே.
தேவனை மட்டும் சார்ந்து நில்.
ஜெயிப்பாய்….
ஜெயமாயிருப்பாய்…
கர்த்தாவே, நீர் எங்களுக்கு தந்தவைகள் ஏராளம். நாங்கள் பதில் செய்ததோ சிறு அளவுதான். இப்பொழுதோ நாங்கள் பலவீனபட்டும், நொறுக்கப்பட்டும் நிற்கின்றோம். எங்களை நோக்கிப்பாரும். எங்கள் சம்பாத்தியங்களிலும், எங்கள் நேரங்களிலும் உமக்குரியவைகளில் செயலாற்ற எங்களை ஒப்புக்கொடுக்கிறோம். எங்களை தள்ளி விடாதிரும்.