என்னை அனுப்பியவரின் சித்தத்தின் படி செய்து அவர் கிரியை முடிப்பதே போஜனம்.
My food is to do the will of Him who sent Me to finish His work. (John 4:34)
Jn4:32; Jn6:33,38-40; Lk15:4-6,10; Lk19:10; Act20:35; 1The4:3; 1Tim2:3,4; 1Tim5:4; Heb10:7; Job23:12; Ps40:6-8; Ps119:143; Isa61:1-3.
இயேசு அவர்களை நோக்கி: நான் என்னை அனுப்பினவருடைய சித்தத்தின் படி செய்து அவருடைய கிரியையை முடிப்பதே என்னுடைய போஜனமாயிருக்கிறது.
(யோவான் 4:34)
யோவான் 4:32; யோவான் 6:33,38-40; லூக்கா 15:4-6,10; லூக்கா 19:10; அப்போஸ்தலர் 20:35; 1 தெசலோனிக்கேயர் 4:3; 1 தீமோத்தேயு 2:3,4; 1 தீமோத்தேயு 5:4; எபிரெயர் 10:7; யோபு 23:12; சங்கீதம் 40:6-8; சங்கீதம் 119:143; ஏசாயா 61:1-3.
தேவ சித்தம் செய்தல்:
தேவன் தம்முடைய விருப்பத்தை நிறைவேற்றவே தூதர்களைப் படைத்தார். அவர்கள் கலகமுண்டாக்கியபோது அவர்களை தள்ளிவிட்டு மனுக்குலத்தை படைத்தார். மனுக்குலம் அவர் விருப்பத்திற்கு மாறாக நடந்து கொண்டபோது மரணத்தை கட்டளையிட்டார்.
கிருபையுள்ள தேவன் இரக்கத்தில் ஐசுவரியமுள்ளவராய் இருந்ததினால் ஆபிரகாமை தெரிந்துகொண்டு இஸ்ராயேலை பரிசுத்த ஜாதியாக்கினார்.
இஸ்ராயேலரும் தேவ விருப்பம் செய்ய தவறியபோதுபுறஜாதியாரை மீட்கும்படி தேவன் தம் குமாரனை அனுப்பினார்.
ஆதாம் கீழ்படியாமல் போனார்.இயேசுவோ கீழ்படிதலை வெளிப்படுத்தினார்.
இந்த தேவ சித்தம் என்ற விஷயத்தில் சில உண்மைகளை நாம் அறிந்தேயாக வேண்டும்.
1. தேவ சித்தம் செய்த, செய்யாத விவிலிய புருஷர்களை அடையாளம் கண்டுகொள்ள வேண்டும்.
2. தேவ பணி செய்யும்படியாய் ஏற்படுத்தபட்ட தேவ பணியாளர்களுக்கு தேவன் கொடுத்த கட்டளையென்ன என்று அறிந்திருக்க வேண்டும்.
3. வீழ்ந்துபோன, தள்ளிவிடப்பட்டதின் காரணங்களை நன்றாக அறிந்திருக்க வேண்டும்.
4. இயேசுகிறிஸ்துவை குறித்த பிதாவின் நோக்கம் என்ன, இயேசு கிறிஸ்து பிதாவின் சித்தம் செய்ய செயல்பட்ட விதம் ஆகியவற்றை தெளிவாக அறிந்திருக்க வேண்டும்.
5. ஆதிசபை பிதாக்கள் தேவ சித்தம் செய்யும்படியாய் முன்வந்தபோது அவர்கள் அடைந்த பாடுகள், மற்றும்நன்மைகளை அறிந்திருக்க வேண்டும்.
6. சபை வரலாற்றில் காணப்பட்டுள்ள வீழ்ச்சிகளிலும், எழுப்புதல்களிலும் செயல்பட்ட சபை பிதாக்களின் செயல்பாடுகளை அறிந்திருக்க வேண்டும்.
7. விவிலியத்தின் Ultimate Goal என்ன என்று கட்டாயமாக அறிந்திருக்க வேண்டும்.
இந்த 7 விதிமுறைகளுமே தேவ சித்தம் அறியும்படியான விதிமுறைகள்.
நாம்….
– தேவ சித்தம் அறிந்திருத்தல்.
– தேவ சித்தம் செய்ய தன்முனைப்பு.
– தேவசித்தத்தோடு உலகியல் காரியங்களை கலக்காமை.
– பரிசுத்த ஆவியின் முழுமையான கட்டுப்படுத்தலுக்குள்ளாதல்.
– தேவ சித்தம் செய்யும்படியான அர்ப்பணம்.
– தேவ சித்தம் செய்தல்.
– தேவ சித்தம் செய்வதினால் உண்டாகும் மாற்றங்களிலே தொடர்ந்து தேவ சித்தத்திற்காய் ஓடுதல். ஆகியவற்றில் தேறியிருக்க வேண்டும்.
இயேசுவே மாதிரி…
கிறிஸ்தவ வாழ்விற்கும்,
இறை கோட்பாடுகளுக்கும்,
கிறிஸ்தவ ஐக்கியத்திற்கும்,
கிறிஸ்தவ திருப்பணிகளுக்கும் இயேசுவே மாதிரி. பிறமாதிரிகளை அவரோடு இணைக்காதீர். தேவசித்தம் செய்யாது வழிவிலகி விடுவீர். எச்சரிக்கை.
கர்த்தாவே, உம் சித்தம் செய்யவே உம் குமாரன் வந்தார், செய்தார், நிறைவேற்றினார், நிறைவடைந்தார். நாங்களும் உம் குமாரனைபோல உம் சித்தம் செய்ய ஒப்படைக்கின்றோம். உமது ஆவியானவர் எங்களில் நிலைத்திருந்து எங்களை உம் நேர்கோட்டில் உமக்கு நேராக ஓட உதவி செய்யும்.