அவரை வந்து பாருங்கள், அவர் கிறிஸ்துதானோ?
Come,see a Man who told me all things that I ever did.Could this be the Christ? (John 4:29)
Jn1:39; Jn5:15; Jn7:41; Mt12:23; Mk5:19; Lk2:17,26; Lk8:39; Lk9:20; Act10:24; Judg13:10; 1Sa9:19; 2Ki5:4.
நான் செய்த எல்லாவற்றையும் ஒரு மனுஷன் எனக்குச் சொன்னார்: அவரை வந்து பாருங்கள்: அவர் கிறிஸ்துதானா என்றாள். (யோவான் 4:29)
யோவான் 1:39; யோவான் 5:15; யோவான் 7:41; மத்தேயு 12:23; மாற்கு 5:19; லூக்கா 2:17,26; லூக்கா 8:39; லூக்கா 9:20; அப்போஸ்தலர் 10:24; நியாயாதிபதிகள் 13:10; 1 சாமுவேல் 9:19; 2 இராஜாக்கள் 5:4.
வந்து பாருங்கள்:
சமாரிய பெண்ணுக்கு கிடைத்த சிறிய வெளிப்பாடு எதுவெனில்.
– சாதாரண யூதனாக கண்டாள்.
– யாக்கோபைவிடவும் பெரியவராக கண்டாள்.
– தீர்க்கதரிசியாக கண்டாள்.
– கிறிஸ்துவாகிய மேசியாவாக கண்டாள்.
இந்த சிறிய வெளிப்பாட்டை கொண்டு தன் இனத்தாரிடையில் தனக்கு நிகழ்ந்த மாற்றங்களை எடுத்துரைக்கின்றாள்.
இயேசுவை மற்றவர்க்கு அறிமுகப்படுத்துதல் – அறிவித்தல்.
கிறிஸ்துவை அறிவிப்பதே கிறிஸ்தவனின் வேலையாகும்.
கிறிஸ்துவை அறிவிக்குமுன்பாதாக சில காரியங்களை அறிந்திருக்க வேண்டும்.
– இயேசுவை கண்டிருக்க வேண்டும்.
– இயேசுவை குறித்த தெளிவை விவிலியத்திலிருந்து பெற்றிருக்க வேண்டும்.
– இயேசுகிறிஸ்துவின் கிரியைகளை தன் வாழ்வில் அனுபவித்திருக்க வேண்டும். இயேசுவால் உள்ளத்திலும், உணர்விலும், வெளிப்புறத்திலும் மாற்றம் பெற்றிருக்க வேண்டும்.
– இயேசு கிறிஸ்துவை காண்பிக்க – அறிவிக்க பரிசுத்த ஆவியானவரின் அகத்தூண்டுதல் மிகவும் அவசியமானது.
அறியாமல் புரியவைக்க முடியாது.
காணாமல் விளக்கவியலாது.
அனுபவிக்காமல் அறிவிக்க முடியாது.
கிறிஸ்துவை அறிவிப்பதினால் கிடைக்கும் சில நன்மைகள்.
1. ஆன்மீக வளர்ச்சிக்கு எதிராக எழும்பும் அக்கிரமத்தின் எல்லையை சுருக்குகின்றோம்.
2. நம்மில் தொடங்கப்பட்ட நற்கிரியை வெளியே கொடுக்கப்படுவதினால், தேவன் நம் வாழ்வில் செய்யும் கிரியைகள் அதிகமாகின்றது.
3. நமது உலகியல் ஆக்கபூர்வமான வளர்ச்சியின் எல்லை விஸ்தாரமாகின்றது.
4. அவரின் பணி செய்வதற்குரிய உயரிய கூலியை மறவாமல் தேவன் கொடுக்கின்றார்.
5. நமக்குள் உண்டான சந்தோஷம், சமாதானம் நம்மையும் பிறரையும் நல்ல ஐக்கியத்துக்குள் வைக்கின்றது.
6. அவர் நம்மோடுகூட இருந்து கிரியை செய்கின்றார். கீழ்படிதலே கிரியைக்கான வழி.
கர்த்தாவே, உம் குமாரனின் இரட்சண்ய கிரியைகளை அனுபவிப்பதற்காகவே எங்களை மீட்டெடுத்தீர். நாங்கள் உம் பெரிய கட்டளைக்கு கீழ்படிந்து உம்முடைய நன்மைகளை பெற்று மேலும் மேலும் உம் ஒளியின் இராஜ்ஜியத்தை விரிவாக்க உம் ஆவியானவரை கொண்டு எங்களுக்கு உதவி செய்யும்.