பாவியாயிருக்கிற மனுஷன் இப்படிப்பட்ட அற்புதங்களை எப்படி செய்வான்.
How can a man who is a sinner do such signs? And there was a division among them. (John 9:16)
Jn9:24,30-33; Jn3:2; Jn5:36; Jn14:11; Jn15:24; Lk13:31-33; Act14:4; 1Cor1:10.
அப்பொழுது பரிசேயரில் சிலர்: அந்த மனுஷன் ஓய்வுநாளைக் கைக்கொள்ளாததினால் அவன் தேவனிடத்திலிருந்து வந்தவனல்ல என்றார்கள். வேறுசிலர்: பாவியாயிருக்கிற மனுஷன் இப்படிப்பட்ட அற்புதங்களை எப்படிச் செய்வான் என்றார்கள். இவ்விதமாய் அவர்களுக்குள்ளே பிரிவினையுண்டாயிற்று. (யோவான் 9:16)
யோவான் 9:24,30-33; யோவான் 3:2; யோவான் 5:36; யோவான் 14:11; யோவான் 15:24; லூக்கா 13:31-33; அப்போஸ்தலர் 14:4; 1கொரிந்தியர் 1:10.
குற்றபடுத்தும் ஆவி:
தேவனுடைய இராஜ்ஜியத்தில் குற்றப்படுத்தும் ஆவிக்கு இடமில்லை. குற்றம் செய்கிறவர்களைக் குற்றவாளியாக தீர்ப்பது தேவ இலட்சணம். நிரபராதிகளை – குற்றமில்லாதவர்களைக் குற்றப்படுத்துவது சாத்தானின் இலட்சணம்.
ஒருவரில் உள்ள தவறுகளைக் கண்டுபிடிப்பதற்கு தானொரு தவறில்லாத மனிதனாக இருக்க வேண்டும். தன்னில் குற்றங்களை – பிழைகளை – தவறுகளை வைத்துகொண்டு பிறரை குற்றப்படுத்துகிறவன் சாத்தானைக் கொண்டிருப்பவனே.
ஒருவரில் உள்ள குற்றங்களை – பிழைகளை நீக்குவதற்காக குற்றம் கண்டுபிடிப்பதில் தவறில்லை. ஆனால் குற்றப்படுத்துவதற்காகவே குற்றம் கண்டுபிடிப்பது தவறானது.
பாவம் உண்டானபோது சாத்தான் குற்றம் சாட்டுகிறவனாக மாறினான். தான் தேவனுக்கு எதிராக செய்த கலகத்தை மறைப்பதற்காக நீதிமான்கள் மேலும் , கிறிஸ்துவின் மேலும், சபையின் மேலும் குற்றசாட்டுகளை அடுக்குகிறான்.
மனுகுலத்தில் பாவம் புகுந்தபோது தன்னை பிறர் குற்றபெபடுத்துவதை ஏற்காமல் குற்றத்தையே பெரிதுபடுத்துகிற மனோபாவம் பெருகிற்று.
வேதனை உண்டாக்கும் வழி தன்னில் உள்ளதா என்று ஆராயும் மனோபாவம் பரிசுத்த ஆவியினாலும் வசனத்தினாலுமே வருகின்றது. இந்த மனோபாவம் உண்டாகாதபடிக்கு சமீபகாலங்களாக என்னில் ஒரு தவறும் இல்லை என்று மார்தட்டி நிற்கும் தன்மைகள் பெருகிவிட்டது.
தவறுகளை சுட்டிகாட்டினால் நீ குற்றபடுத்தும் ஆவியுள்ளவன் என்றும் , யாரும் செய்யாததுவா நான் செய்தேன் என்றும் சொல்லி நிமிர்ந்து நிற்கின்றனர்.
தேவன் முன்னிலையில் இரட்சிக்கபட்டிருந்தாலும் அசுத்த உதடுகள், அசுத்த மனிதர்கள், ஆவிகள் உள்ள உலகத்தில் வாழ்கிறாய். அனுதினமும் உன்னை ஆராய்ந்து பார்த்து தேவராஜ்ஜியத்துக்கு நேராய் முன்னேறு. குற்றமில்லாத தேவனிடமிருந்தே குற்றமற்ற நமக்கு நன்மைகள் வருகின்றது.
கர்த்தாவே நாங்கள் குற்றப்படுத்துகிறவர்களாக அல்ல எங்கள் குற்றங்களைக் களைகிறவர்களாக இருக்க வெளிச்சம் தாரும்.