உன் கண்கள் எப்படி திறக்கப்பட்டது

உன் கண்கள் எப்படி திறக்கப்பட்டது

Therefore they said to him,How were your eyes opened? (John 9:10,11)

Jn9:15,21,26; Jn3:9; Mk4:26,27; Act14:27,28; Ecc11:5; Jer36:17; Lk13:4.

அப்பொழுது அவர்கள் அவனை நோக்கி: உன் கண்கள் எப்படித் திறக்கப்பட்டது என்றார்கள். (யோவான் 9:10)

அவன் பிரதியுத்தரமாக: இயேசு என்னப்பட்ட ஒருவர் சேறுண்டாக்கி, என் கண்களின்மேல் பூசி, நீ போய் ஸீலோவாம் குளத்திலே கழுவு என்றார்.அப்படியே நான் போய்க் கழுவி, பார்வையடைந்தேன் என்றான். (யோவான் 9:11)

யோவான் 9:15,21,26; யோவான் 3:9; மாற்கு 4:26,27; அப்போஸ்தலர் 14:27,28; பிரசங்கி 11:5; எரேமியா 36:17; லூக்கா 13:4.

நம்பிக்கையிழந்த மனுக்குலம்:
சந்தேகம், கேள்வி எழுப்புதல் ஆகிய யாவும் அவநம்பிக்கைக்கும், அவிசுவாசத்துக்கும் இட்டுச் செல்லும். இஸ்ராயேல் ஜனங்கள் அற்புதங்களை ஏற்றுக்கொள்ளாததற்கு காரணம் பொறாமையினால் நிறைந்திருந்ததுதான். இயேசுகிறிஸ்து செய்த அற்புதங்கள் யாவையும் சாதாரண மக்கள் எளிதாய் ஏற்றுக்கொண்டார்கள். ஆனால் படித்தவர்களும், வசதிபடைத்தோர்களும், தலைவர்களும் ஏற்றுக்கொள்ளாதிருந்தனர்.

சுவிசேஷங்களில் சொல்லப்பட்டுள்ள இயேசு செய்த அற்புதங்கள் யாவும் தேவனையும், கிறிஸ்துவையும் விசுவாசிப்பதற்கு காரணமாயமைந்தன. அற்புதங்களை ஏற்றுகொள்வதினால் விசுவாசம் வருகிறது. இயேசுவை விசுவாசிப்பதினாலும் அற்புதங்கள் நடப்பதுண்டு.

கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினால் அவர் ஒருவரே தேவன் என்று அறிக்கையிட்டு விசுவாசிக்கும்போது அவர் செய்யும் கிரியைகளை உன் வாழ்வில் காணலாம்.

நான் செய்கிற கிரியைகளினாலாவது என்னை நம்புங்கள் என்று கூறியும் ஏற்றுக்கொள்ளாதிருந்து அழிவுக்குள்ளான மக்களைபோல இராமல் கர்த்தராகிய இயேசுவை முழுமையாய் ஏற்றுகொண்டு அவர் ஒருவருக்கு மட்டுமே ஆராதனை செய்து அவர் சொல்படி வாழ உன்னை ஒப்புக்கொடு.

அற்புதங்கள் இயேசுவை நம்ப வைக்கிறது.
அவரை நம்புவதினால் அற்புதங்கள் தொடர்கின்றது.
கர்த்தாவே நீர் செய்த அற்புதங்கள் போல எங்கள் வாழ்விலும் அற்புதங்களை செய்து உமது மகன்மூலம் அதீத நம்பிக்கையுடையவர்களாயிருக்க உதவிடும்.

ADD YOUR COMMENT

Powered By Indic IME