பெரியவரோ

நம் பிதா யாக்கோபைப் பார்க்கிலும் நீர் பெரியவரோ?

Are You greater than our father Jacob, who gave us the well? (John 4:12)
Jn8:53; Mat12:41,42; Heb3:3; Rev22:14; Isa53:2,3.

இந்தக் கிணற்றை எங்களுக்குத் தந்த நம்முடைய பிதாவாகிய யாக்கோபைப்பார்க்கிலும் நீர் பெரியவரோ? அவரும் அவர் பிள்ளைகளும் அவர் மிருகஜீவன்களும் இதிலே குடித்ததுண்டே என்றாள். (யோவான் 4:12)

யோவான் 8:53; மத்தேயு 12:41,42; எபிரெயர் 3:3; வெளி22:14; ஏசாயா 53:2,3

நீர் பெரியவரோ?

சமாரியர்களுக்கும், இஸ்ரேலியர்களுக்கும் ஆபிரகாம் – ஈசாக்கு – யாக்கோபு ஆகிய மூன்று குலதந்தையர்களும் மிகவும் முக்கியமானவர்கள்.
அவர்களுக்கு இணையாக யாரையும் ஒப்பிட்டு நோக்கார்கள்.
ஆனால், இயேசுகிறிஸ்து இவர்களை விடவும் பெரியவர் என்பதை நிரூபித்து காட்டுகின்றார். அதனை அடுத்த பகுதிகளில் இயேசு விளக்குகின்றார்.

இயேசுவை பெரியவராக ஏற்கதக்க தடைகளில் பிரதானமான ஒன்று பாரம்பரிய முறைமைகள்.

பாரம்பரியங்கள் யாவும் குலப்பெருமையையும், குல எழுச்சியையும் காட்டுகிறது.

பாரம்பரியங்கள் பொய்யானவைகள் அல்ல, ஏதோ ஒரு நிகழ்வை மையமாக கொண்டு உருவாக்கப்படுபவை. இதனால், இதனை மேற்கொள்வது சற்று கடினமே. இந்த பாரம்பரியத்தைவிட மேலானதொரு பாரம்பரியம் உருவாக்கப்படும்போதுதான் அவைகளிலிருந்து வெளிவர இயலும்.

பாரம்பரியங்கள் ஒதுக்கப்படவோ, வெறுக்கப்படவோ தக்கவைகளல்ல, அவைகள் ஆராயப்படவேண்டியவைகள். அவைகளினூடே சுவிசேஷ ஒளி செல்லக்கூடிய துளைகளை ஏற்படுத்த வேண்டும்.

பாரம்பரியங்கள் பெருமைபட்டுகொள்வதற்கானதல்ல, அவைகள் அழுத்திக்கூறும் வாழ்வியல் முறைமைகள், ஒழுக்க முறைகள் ஆகியவை பின்பற்றப்பட வேண்டியவைகளேயாகும்.

நமது இந்தியாவில்புறமத பாரம்பரியம், இயற்கைசார் பாரம்பரியங்கள் உண்டு.

நமது கிறிஸ்தவத்தில்….
ரோமன் கத்தோலிக்க பாரம்பரியம், புரோட்டஸ்டாண்டு பாரம்பரியம், பெந்தெகோஸ்தே பாரம்பரியம் உண்டு.

எல்லா கிறிஸ்தவ முறைகளும் இயேசுவையே உயர்த்துகின்றன. ஒவ்வொரு பாரம்பரியங்களிலும் உள்ள சில குறைபாடுகளை உணர்ந்து, களைந்து முன்னெடுத்து போவோமெனில் இயேசு ஒரு பெரியவராகவே காட்சியளிப்பார்.

யாக்கோபு குல தந்தைதான். ஆனால்,
– இயேசுவோ குலதந்தையை இயக்கியவர், மேலானவர், சிறந்தவர்.
– வாழ்க்கைமுறையிலும் இயேசு மேலானவர்.
– ஒழுக்கமுறையிலும் இயேசு மேலானவர்.

கர்த்தாவே, ஜீவன் தந்து இரட்சித்து வழிநடத்தும் உம்மை நாங்கள் பின்பற்றுகிறோம். ஆனால், அனேக நேரங்களில் சில பாரம்பரியங்களை கொண்டு இயேசு கிறிஸ்துவாகிய உமது மகிமையையும், மகத்துவத்தையும் மறைக்கின்றோம். எங்களை மன்னியும். நாங்கள் நல்லதொரு பாரம்பரியத்தை வரப்போகும் சந்ததிக்கு தர எங்களுக்கு உதவும்.

ADD YOUR COMMENT

Powered By Indic IME