தேவனால் உண்டானவன் தேவனுடைய வசனங்களுக்குச் செவிகொடுக்கிறான்.
He who is of God hears God’s words. (John 8:47)
Job33:6; Lk3:38; 1Jn3:9,10; 1Jn4:6; 1Jn5:1,18; Jn1:12,13; 1Jn7:17; 1Jn18:37; 3Jn1:11; Isa55:3; Jer25:3; Dan12:10; Hos14:9.
தேவனால் உண்டானவன் தேவனுடைய வசனங்களுக்குச் செவிகொடுக்கிறான், நீங்களும் தேவனால் உண்டாயிராதபடியினால் செவிகொடாமலிருக்கிறீர்கள் என்றார். (யோவான் 8:47)
யோபு 33:6; லூக்கா 3:38; 1யோவான் 3:9,10; 1யோவான் 4:6; 1யோவான் 5:1,18; யோவான் 1:12,13; யோவான் 7:17; 18:37; 3 யோவான் 1:11; ஏசாயா 55:3; எரேமியா 25:3; தானியேல் 12:10; ஓசியா 14:9.
தேவனால் உண்டானவன்:
பூமிசார் மனிதனில் ஆதாமும், ஏவாளும் மட்டுமே தேவனால் உண்டானவர்கள். தேவனால் பிறந்த அவர்களுக்குள் பாவம் என்ற கீழ்படியாமை நுழைந்து தேவனுடைய காணியாட்சிக்கு தூரமாய் போனதினால் தேவன் ஆவிசார் பிறப்பைக் கொண்டு வந்தார். பரிசுத்த ஆவியின்படி தேவனால் பிறந்தவர்கள் மட்டுமே தேவனையும், தேவனுடைய குமாரனையும், அவருடைய வார்த்தைகளையும் ஏற்றுக்கொள்வர். மாம்சத்தின்படி வாழ்வோர் ஆவியின்படி பிறத்தலையும், தேவனுடைய வார்த்தைகளையும், தேவ குமாரனையும் முழுமனதுடன் பின்பற்ற இயலாதவர்களாயிருப்பர்.
தேவனால் பிறந்தவர்கள் அவருடைய ஆவியின்படியும், வசனத்தின்படியும் வாழ்வர்.
தேவனால் பிறந்தவர்கள் தேவனுக்குரியவர்களாயிருப்பர்.
தேவனால் பிறந்தவர்கள் உலகத்துக்குரியவைகள் மீதும், உலகத்திலும் அன்புகூரமாட்டார்கள்.
தேவனால் பிறந்தவர்கள் விசுவாசத்தின் மக்களாவர்.
தேவனால் பிறந்தவர்கள் சாத்தானையும், பாவத்தையும், சாபத்தையும், மாம்சத்தையும், மரணத்தையும் ஜெயிக்கிறவர்களாயிருப்பர்.
தேவனால் பிறந்தவர்கள் மட்டுமே தேவனை அறிவார்கள்.
தேவனால் பிறந்தவர்கள் ஒரே
ஆவியையுடையவர்களாயிருப்பதினால் மேட்டிமையை வெறுத்து, சுயத்தை வெறுத்து ஒருவருக்கொருவர் இணக்கமாய் நடப்பர்.
தேவனால் பிறந்தவர்கள் சிலுவையைச் சுமந்து அனேகம் ஜாதிகளை சொந்தமாக்கிக்கொள்ள வாஞ்சிப்பர்.
தேவனால் பிறந்தவர்கள் தேவனுடைய சத்தம் கேட்டு, தரிசனம் கண்டு நடப்பர். இன்னும் பல…
நாம் வெற்றி வாழ்க்கை வாழ பரிசுத்த ஆவியினால் பிறந்து ஜீவிப்போம்.
கர்த்தாவே உம் மகனைபோல நாங்களும் வெற்றியாய் வாழ உம் ஆவியை தந்து உம் பிள்ளைகளாய் மாற்றினதற்காய் நன்றி.