என்னிடத்தில் பாவம் உண்டென்று உங்களில் யார் என்னைக் குற்றப்படுத்தக்கூடும்?
Which of you convicts Me of sin? (John 8:46)
Jn8:7; Jn9:24-31; Jn14:30; Jn15:10; Jn16:7,8; Act7:37; 2Co5:21; 2Thes2:13; Heb4:15; Heb7:26; 1Pet2:22; 1Jn3:5; 1Sam26:18; Pr8:7.
என்னிடத்தில் பாவம் உண்டென்று உங்களில் யார் என்னைக் குற்றப்படுத்தக்கூடும்? நான் சத்தியத்தைச் சொல்லியிருக்க, நீங்கள் ஏன் என்னை விசுவாசிக்கிறதில்லை. (யோவான் 8:46)
யோவான் 8:7; யோவான் 9:24-31; யோவான் 14:30; யோவான் 15:10; யோவான் 16:7,8; அப்போஸ்தலர் 7:37; 2கொரிந்தியர் 5:21; 2தெசலோனிக்கேயர் 2:13; எபிரெயர் 4:15; எபிரெயர் 7:26; 1பேது 2:22; 1யோவான் 3:5; 1 சாமுவேல் 26:18; நீதிமொழிகள் 8:7.
பாவமில்லாத இயேசு:
தன்னை எதிர்த்தவர்கள், தனக்கு எதிரானவர்கள், தன்னை பகைப்பவர்கள் மத்தியில் என்னில் பாவம் உண்டென்று யார் என்னைக் குற்றப்படுத்தக்கூடும் என்று ஆணித்தரமாக கேள்விக் கேட்டார்.
இயேசுகிறிஸ்துவில் பாவம் இல்லாததினால் சாத்தானுக்கு அவரில் ஒன்றும் செய்யமுடியவில்லை. தீமை அவரை நெருங்க முடியவில்லை.
இயேசுவில் பாவம் இல்லாதிருந்ததினால்தான் அவர் தேவ ஆட்டுகுட்டி என்றும், உலகின் பாவங்களை சுமந்து தீர்க்க வெளிப்பட்டார் என்றும் விவிலியம் கூறுகின்றது. இரட்சிப்பு தூய்மையிலிருந்து வந்தது.
இயேசுவில் பாவம் இல்லாதிருந்ததினால் எந்த சக்தியும் அவருக்கு எதிர்த்து நிற்க முடியவில்லை. அவர் தம் வேளையை ஒப்புக்கொடுத்தபின்பே அவரை துன்புறுத்த முனைந்தனர்.
இயேசுவில் பாவம் இல்லாதிருந்ததினால் அவரின் ஜெபம் கேட்கப்பட்டது. தம் தந்தையிடம் விண்ணப்பித்த யாவுமே ஏற்றுக்கொள்ளப்பட்டது. இன்றும் பிதாவிடம் பரிந்து பேசிக்கொண்டிருக்கின்றார்.
இயேசுவில் பாவம் இல்லாதிருந்ததினால்தான் பிதா அவரை என் நேசகுமாரன் என்று அறிவித்தார். அவரில் பிரியமாயிருந்தார்.
கிறிஸ்து பாவமில்லாமல் பிதாவின் கட்டளைகளை நிறைவேற்றியதினால்தான் எல்லா அதிகாரத்தையும் அவரிடம் ஒப்படைத்தார்.
பாவமில்லாத கிறிஸ்துவை மட்டுமே முழு உலகிற்கும் பிரசங்கிக்க வேண்டும் என்று கட்டளையிடப்பட்டுள்ளது. ப.ஏ மனிதர்களையல்ல. அவர்களில் குறைகளும், பிழைகளும் நிரம்ப காணப்பட்டது. இயேசுவோ மாசில்லாதவர், பழுதில்லாதவர், அவரையே சுமந்து செல்வோம், அறிவிப்போம், அவர்போல் வாழ்வோம்..
கர்த்தாவே உம மகனை எங்களுக்கு பாவமில்லாத மனிதனாகவும், தெய்வகுமாரனாகவும் தந்தீர். நாங்களும் அவரைபோல வாழவே எங்களிடம் எதிர்பார்க்கின்றீர். உமக்கு நன்றி. அதன்படி நடக்க உதவிடும்.