நான் சத்தியத்தைச் சொல்லுகிறதினால் நீங்கள் என்னை விசுவாசிக்கவில்லை.
But because I tell the truth, you do not believe Me. (John 8:45)
Jn3:19,20; Jn7:7; Gal4:16; 2Thes2:10; 2Tim4:3,4; Heb3:10,11; 1Jn1:6; 1Jn4:6; Job21:14; Isa30:10; Am5:10.
நான் உங்களுக்குச் சத்தியத்தைச் சொல்லுகிறபடியினாலே நீங்கள் என்னை விசுவாசிக்கிறதில்லை. (யோவான் 8:45)
யோவான் 3:19,20; யோவான் 7:7; கலாத்தியர் 4:16; 2தெசலோனிக்கேயர் 2:10; 2தீமோத்தேயு 4:3,4; எபிரெயர் 3:10,11; 1யோவான் 1:6; 1யோவான் 4:6; யோபு 21:14; ஏசாயா 30:10; ஆமோஸ் 5:10
சத்தியம் பகையாளியாக்குமோ?
இயேசுகிறிஸ்து வெளிச்சமாகிய சத்தியத்தை இருள் நிறைந்த இவ்வுலகிற்கு கொண்டு வந்ததினால் சத்தியமாகிய ஒளி எல்லாராலும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. உலகம் ஏற்றுக்கொண்டாலும், இல்லாவிட்டாலும் சத்தியத்தை பேசுவதே இயேசுவின் பணி. அதுவே நமது பணியாகவும் இருக்க வேண்டும்.
சத்தியம் நம்மை பகையாளியாக்க காரணம் என்ன?
ஒருவரின் குற்றங்களை – தவறுகளை சுட்டி காட்டுவதினால் சத்தியம் வெளிப்படுகிறது. இதனால் பகையாளியாகின்றோம். ஏன் அவர்கள் தங்கள் குற்றங்களை ஏற்றுக்கொள்ளாமல் நம்மை பகைக்கின்றார்கள்?
- உலகம் முழுவதும் பொல்லாங்கனுக்குள் விழுந்து கிடக்கிறது. சத்திய விளிப்புணர்வை கொண்டுதான் மீட்க முடியும்.
- நன்மை செய்கிறவன் ஒருவனாகிலும் இல்லை. எல்லோரும் வழிதப்பி நடக்கின்றனர். சத்தியத்தினால் நன்மை உண்டாக இடம் தரவில்லை.
- நன்மை எது? தீமை எது? என்று பகுத்தறியும் மனோபாவம் இல்லாததுவே.
- கிறிஸ்துவின் வெளிச்சத்தை தனக்குள் கொண்டிராததுவே.
- பரிசுத்த ஆவியின் உள்ளான கிரியைகளுக்கு இடம் கொடாதிருத்தல்.
- கர்த்தருடைய வாக்கியங்களை அறிந்து உணராதிருத்தல்.
- எல்லாரும் செய்வதைதானே, சொல்வதைதானே செய்கிறேன், சொல்லுகிறேன். இதில் என்ன தவறு.
- தொலைந்த ஒன்றைக் கண்டுபிடிக்க விளக்கு வெளிச்சம் உள்ளதுபோல தீமை தனக்குள் இருப்பதை அறிந்துகொள்ளக்கூடிய நன்மையின் வெளிச்சம் – சத்திய வெளிச்சம் இல்லாததுவே.
- உண்மை பேசுகிறவனும், விவிலிய சத்தியத்தை போதிக்கிறவனும் சமீபகாலமாக சபையாராலும், உலகத்தாராலும் அதிகமாக பகைக்கப்படுகிறார்கள்.
சத்தியத்தோடு எப்பொழுது நாம் இணைந்துகொள்ளுகிறோமோ அப்பொழுது பொய்யர்களையும், பொய் வழியையும் விட்டு விலகிக்கொள்கிறோம். நாம் நமது ஆத்துமாவைக் காத்துக் கொள்வோம்.
கர்த்தாவே சத்தியத்தைப் பகைக்கிற கூட்டத்திலிருந்து எங்களைப் பிரித்தெடுத்து சத்தியவான்களோடுளை இணைத்துக்கொள்ளும்.