நீங்கள் தாழ்விலும் உலகத்திலிருந்துண்டானவர்கள், நானோ உயர்விலிருந்துண்டானவன்.

நீங்கள் தாழ்விலும் உலகத்திலிருந்துண்டானவர்கள், நானோ உயர்விலிருந்துண்டானவன்.

You are from beneath; I am from above. You are of this world; I am not of this world. (John 8:23)

Jn1:14; Jn3:13,31; Jn15:18,19; Jn17:14,16; Ro8:7,8; 1Co15:47,48; Phi3:19-21; Jas3:15-17; Jas4:4; 1Jn2:15,16; 1Jn4:5,6; 1Jn5:19,20.

அவர் அவர்களை நோக்கி: நீங்கள் தாழ்விலிருந்துண்டானவர்கள், நான் உயர்விலிருந்துண்டானவன், நீங்கள் இந்த உலகத்திலிருந்துண்டானவர்கள், நான் இந்த உலகத்திலிருந்துண்டானவனல்ல. (யோவான் 8:23) 

யோவான் 1:14; யோவான் 3:13,31; யோவான் 15:18,19; யோவான் 17:14,16; ரோமர் 8:7,8; 1கொரிந்தியர் 15:47,48; பிலிப்பியர் 3:19-21; யாக்கோபு 3:15-17; யாக்கோபு 4:4; 1யோவான் 2:15,16; 1யோவான் 4:5,6; 1யோவான் 5:19,20.

யார் எங்கேயிருந்து?
   இயேசுகிறிஸ்து கூறும் சில வார்த்தைகளை கவனிப்போம்.
என்னையும் அறியீர்கள். என் பிதாவையும் அறியீர்கள்.
நான் எங்கேயிருந்து வந்தேனென்றும், எங்கே போகிறேனென்றும் உங்களுக்கு தெரியாது.

    நான் போகிற இடத்துக்கு வர உங்களால் கூடாது.
இயேசுவின் இனத்தார், உறவினர்கள், தேசத்தாராயிருந்தும் அவரை அறியாதிருந்த காரணத்தை இங்கே கூறுகின்றார். இஸ்ராயேலர் தாழ்விலிருந்தும், உலகத்திலிருந்தும் உண்டானவர்கள். இதன் பொருள் என்னவெனில் தேவனாலே பிறந்தும், பிரமாணங்களை பெற்றிருந்தும், தேவனுடைய காணியாட்சிக்கு உட்பட்டிருந்தும், தேவனுடைய நன்மைகளை பெற்றிருந்தும் மாம்ச சுபாவத்துக்கும், உலகியல் சிந்தனைகளுக்கும் இடம் கொடுத்து ஆவியில் பிறந்த கிறிஸ்துவை அறியாதபடிக்கு மனங்கள் பெருந்திண்டியினால் நிரம்பி போயிற்று.

   நமது குணங்களும், செயல்பாடுகளுமே நமது பிறப்பை தீர்மானிக்கின்றது. மாம்சீக தகப்பனால் – தாயால் பிறந்தவர்கள் அவர்களின் குணங்களையே பிரதிபலிப்பார்கள். மாம்சீக தகப்பனில் – தாயில் பிறந்திருந்தும் மாம்சத்துக்கும், பாவத்துக்கும், பழைய சுபாவத்துக்கும் செத்து ஆவிக்குள்ளாக ஆவிக்குரிய தகப்பனுக்கு பிறந்தவர்கள் ஆவிக்குரிய தகப்பனின் சுபாவத்தையும், குணத்தையும் பெற்றிருப்பார்கள்.

  இயேசு சீஷர்களை பார்த்து நீங்கள் உலகத்தாரல்ல என்றார். இயேசுவின் இரத்தத்தால் கழுவபட்டு, ஆவியினாலும் வசனத்தினாலும் ஜெநிப்பிக்கப்பட்டு விசுவாசத்தினாலே கிருபைக்கு சொந்தகாரரானவர்கள் உலகியல் ரீதியாகவும், மாம்சீக ரீதியாகவும், உறவுகளின் ரீதியாகவும் செயல்படுவோமெனில் மிகவும் பரிதபிக்கபடத்தக்கவர்களாவோம்.
 

  இயேசுகிறிஸ்து மரியாளின் வயிற்றிலிருந்து பிறந்திருந்தும் மரியாளின் குணத்தையல்ல தேவனின் குணத்தையே கொண்டிருந்ததினால்தான் நான் உயர்விலிருந்துண்டானவன் என்றார். பரலோக சிந்தையுடையவன் பரலோகத்துக்கடுத்தவைகளையே பேசுவான்.பூலோக சிந்தையுடையவன் பூலோகத்துக்கடுத்தவைகளில் மூழ்குவான்.

  கர்த்தாவே எங்கள் குணங்களே எங்களை யாரென்று காண்பித்துகொடுத்து குற்றவாளியாக்குவதினால் உம் குமாரனின் ஆவி உடையவர்களாயிருந்து குற்றமற்றவர்களாயிருக்க எங்களுக்கு உதவி செய்யும்.

ADD YOUR COMMENT

Powered By Indic IME