பிரயாணத்தினால்

இயேசு பிரயாணத்தினால் இளைப்படைந்தார்

Jacob’s well was there. Jesus therefore, being wearied from His journey, sat thus by the well. (John 4:6) Mt4:2; Mt8:24; Mt11:28; Lk2:7; Lk9:58; Jn11:9; 2Cor8:9; Heb2:17; Heb4:15.

அங்கே யாக்கோபுடைய கிணறு இருந்தது, இயேசு பிரயாணத்தினால் இளைப்படைந்தவராய் அந்தக் கிணற்றினருகே உட்கார்ந்தார், அப்பொழுது ஏறக்குறைய ஆறாம்மணி வேளையாயிருந்தது. (யோவான் 4:6)

மத்தேயு 4:2; மத்தேயு 8:24; மத்தேயு 11:28; லூக்கா 2:7; லூக்கா 9:58; யோவான் 11:9; 2கொரிந்தியர் 8:9; எபிரெயர் 2:17; எபிரெயர் 4:15.

இளைப்படைந்த இயேசு:
– இளைப்படைந்த இயேசு இளைப்பாறுதல் தருவேன் என்றார். மத்தேயு 11:28.

– பிரயாசப்பட்டு இளைப்படைந்தவனுக்கு வலை நிறைய மீன்கள். லூக்கா 5:5; யோவான் 4:38; 2தீமோத்தேயு 2:6.

– இளைப்படைந்தவர்களை தாங்க வேண்டும். அப்போஸ்தலர் 20:35.

– கர்த்தருக்காக பிரயாசப்பட்டு இளைப்படைந்தவர்களும் உண்டு. ரோமர் 16:6,12; 1கொரிந்தியர் 16:16; 1தெசலோனிக்கேயர் 5;12.

– இளைப்படைந்தாலும் சோர்ந்துபோகாமல் கர்த்தருக்காய் பணிசெய்வது பாக்கியமே. 1கொரிந்தியர் 4:12,13; 1தீமோத்தேயு 4:10.

– அதிகமாக பிரயாசப்படுதல் கர்த்தர் தரும் கிருபை. 1கொரிந்தியர் 15:10; கொலோசெயர் 1:29.

அன்று இயேசு பிரயாணத்தினால் இளைப்படைந்து ஊழியம் செய்தார். இன்று இளைப்படையாமல் ஊழியம் செய்ய ஆசைப்படுகின்றனர்.

அன்று ஊழியம் செய்ய வாகன வசதிகள் இல்லை. என்றாலும் ஊழியம் செய்தார் இயேசு. இன்று வாகனங்கள் தாராளமாய் வைத்திருந்தும் குக்கிராமங்களில் ஊழியம் செய்ய விரும்புவதில்லை.

அன்று இயேசு பணமின்றி, பொருளின்றி ஊழியம் செய்தார். இன்று பணம், பொருள் யாவும் வைத்துக்கொண்டு ஊழியம் செய்கிறோம்.

அன்று ஒன்றுமில்லாமையிலும் ஊழியம் சிறப்பாய் செய்தார் இயேசு. இன்று நிறைய சம்பாதித்து ஊழியம் செய்யும் முறை.

இல்லாமையில் ஊழியம் செய்தாலும் அன்று இயேசு பரலோக ராஜ்ஜியத்தையும், மனந்திரும்புதலையும் பிரசங்கித்தார். இன்றோ, எல்லாம் வைத்துகொண்டு ஐசுவரியத்தை – பொருளாதாரத்தை பிரசங்கிக்கின்றனர்.

அன்று வருத்தம், பசி, தாகம், பாடுகள் அடைந்து பணி செய்ய இயேசு அனுப்பப்பட்டார். இன்றோ இவைகளை அனுபவிப்பதே பாவத்தின் விளைவு என்று பிரசங்கிக்கின்றனர்.

அன்று இயேசு சிலுவையை குறித்து பிரசங்கித்தார். இன்று சிலுவையல்ல, சிங்காசனம் குறித்து பிரசங்கிக்கின்றனர்.

இயேசுவை பிரசங்கி.
இயேசுவைபோல பிரசங்கி.
இயேசு சொன்னதையே பிரசங்கி.

கர்த்தாவே, நாங்கள் உம்மையே பிரசங்கிக்கிறோம். நாங்கள் உம்மைபோல நடந்துகொள்ள உதவி செய்யும். மனுஷர் காணும்படியும், புகழும் படியும் ஊழியம் செய்யாமல். தேவரீர் மகிழும்படி ஊழியம் செய்ய பெலன் தாரும்.

ADD YOUR COMMENT

Powered By Indic IME