ஒருவனும் அவர்மேல் கைபோடவில்லை
Now some of them wanted to take Him,but no one laid hands on Him. (John 7:44)
Jn7:30; Jn8:20; Jn18:5,6; Jn10:39,40; Mk12:12; Lk19:47,48; Act18:10,11; Act23:7-11; Act27:23-25; Isa54:15-17.
அவர்களில் சிலர் அவரைப் பிடிக்க மனதாயிருந்தார்கள், ஆகிலும் ஒருவனும் அவர்மேல் கைபோடவில்லை. (யோவான் 7:44)
யோவான் 7:30; யோவான் 8:20; யோவான் 18:5,6; யோவான் 10:39,40; மாற்கு 12:12; லூக்கா 19:47,48; அப்போஸ்தலர் 18:10,11; அப்போஸ்தலர் 23:7-11; அப்போஸ்தலர் 27:23-25; ஏசாயா 54:15-17.
இந்த நாளிலே ஏசாயா 54:15-17 ன் பகுதியை நாம் இயேசுவின் ஜீவிதத்தை மையமாக வைத்து தியானிப்போம்.
இயேசுகிறிஸ்துவை பின்பற்றுகிறவர்களுக்கும்,
அவருக்கு சேவை செய்கிறவர்களுக்கும் அவர் தந்துள்ள வாக்கானது:
- உனக்கு விரோதமாக எழும்புகிறவர்கள் என்னால் அனுப்பப்பட்டவர்களல்ல.
- உனக்கு விரோதமாய் எழும்புவோர் உன் பக்கம் வருவதுவரையிலும் தாமதித்திரு.
- உனக்கு எதிராக எழும்புகிறவனை உருவாக்கினவர் நானே. நான் அவனை என் சார்பாய் இயக்குவதுவரையிலும் தரித்திரு. எரிச்சலடையாதே.
- உனக்கு விரோதமான ஆயுதங்கள், தீங்குகள் வாய்க்காது.
- உனக்கு விரோதமாக எழும்புகிறவனை குற்றப்படுத்தி மேற்கொள்ளும் அதிகாரத்தை உனக்கு தந்துள்ளேன்.
- உன்னை ஏற்படுத்தி நிலைநிறுத்தியவர் நானே. நீ ஒரு பணியாள் மட்டுமே.
- என் நீதியையும், சுதந்தரத்தையும் நான் நானே காத்துக்கொள்வேன்.
கர்த்தாவே உம் குமாரனை கொண்டு இந்த வாக்குத்தத்தங்களை நிறைவேற்றி எங்களுக்கு உற்சாகம் தந்துள்ளதினால் நாங்கள் இனி சோர்ந்து போவதில்லை.