பிதா அன்பாயிருந்து எல்லாவற்றையும் அவர் கையில் ஒப்புக்கொடுத்திருக்கிறார்.
Jn3:35.
Father loves the Son, and has given all things into His hand.(John3:35)
Jn5:20,22; Jn13:3; Jn15:9; Jn17:2,23,26; Mt3:17; Mt17:5; Mt11:27; Mt28:18; Lk10:22; 1Co15:27; Eph1:20-23; Phi2:9-11; Hec1;2; Hec2:8,9; 1Pet3;22; Ps2:8; Pr8:30; Isa9:6,7; Isa42:1.
பிதாவானவர் குமாரனில் அன்பாயிருந்து எல்லாவற்றையும் அவர் கையில் ஒப்புக்கொடுத்திருக்கிறார்.(யோவான் 3:35)
யோவான் 5:20,22; யோவான் 13:3; யோவான் 15:9; யோவான் 17:2,23,26; மத்தேயு 3:17; மத்தேயு 17:5; மத்தேயு 11:27; மத்தேயு 28:18; லூக்கா 10:22; 1கொரிந்தியர் 15:27; எபேசியர் 1:20-23; பிலிப்பியர் 2:9-11; எபிரெயர் 1;2; எபிரெயர் 2:8,9; 1 பேதுரு 3;22; சங்கீதம் 2:8; நீதிமொழிகள் 8:30; ஏசாயா 9:6,7; ஏசாயா 42:1.
அதிகாரம் பெற்ற இயேசு:
இயேசுகிறிஸ்து பிதாவின் அன்புக்குரியவராயிருந்தும், செயல்பட்டும் காணப்பட்டதால் பிதாவானவர் எல்லாவற்றையும் இயேசுவின் கையில் ஒப்புகொடுத்தார்.
பிதா கிறிஸ்துவில் காட்டிய அன்பு பிதாவின் விருப்பம் செய்ததினால் வெளிப்பட்டது.
அன்பு மட்டுமே – செல்லபிள்ளையாக நடந்து கொள்வதினால் மட்டுமே தேவனிடமிருந்து ஒன்றை பெற முடியும்.
அன்பு எங்கே உள்ளதோ அங்கே அன்பு காட்டுபவரின் கட்டளைகளுக்கு அப்படியே கீழ்படியும் சுபாவமும் இருக்கும். இயேசு பிதாவிடமிருந்து வார்த்தை, ஆவியை மட்டுமல்ல அதிகாரத்தையும் பெற்றுக்கொண்டார்.
இயேசுகிறிஸ்துவின் அதிகாரம்…
– பிசாசுகள், அசுத்த ஆவிகள், சாத்தான், மாந்த்ரீகம் போன்றவைகளின் மேல் அதிகாரம் பெற்றார்.
– மரணம், தற்கொலை, கொலை, விபத்து போன்றவைகள் மீதும் அதிகாரம் பெற்றார். மரணம் அவரை ஒன்றும் செய்ய முடியாது.
– வியாதிகள், பலவீனங்கள். குறைவுகள், இடர்பாடுகள், விழுதல், இழத்தல்போன்ற அனைத்தின் மீதும் அதிகாரம் பெற்றார்.
– புயல், மழை, வெயில், பூமியதிர்ச்சி, கொந்தளிப்பு, வறட்சி போன்றவைகள் மீதும் அதிகாரம் பெற்றார்.
– பாதாளம், நரகம் போன்றவைகள் மீதும் அதிகாரம் பெற்றார்.
– அரசாங்கம், சட்டம் போன்றவைகள் மீதும் அதிகாரம் பெற்றார்.
– முடிவில் நியாதீர்ப்பு செய்யும் அதிகாரத்தையும் பெற்றுள்ளார்.
நாமும் தேவனுடைய அன்புக்கு உரியவர்களாயிருந்து அவர் நமக்கு தருவேன் என்று கூறியுள்ள அதிகாரத்தை பெற்று இப்பூமியில் கிறிஸ்துவின் இறையரசை ஸ்தாபிப்போம்.
கர்த்தாவே, உமது அதிகாரம் மேலானது. அதற்கு உட்பட்டு வாழ எங்களுக்கு சபை, ஊழியகாரர், விவிலியம், பரிசுத்த ஆவி ஆகியவைகளை தந்துள்ளீர். எனவே, நாங்கள் எவர் மேலும் அதிகாரம் செலுத்த முனையாது, எங்கள் மேல் அதிகாரம் செலுத்துபவர்களுக்கு விவிலிய முறையில் கீழ்படிந்து நடக்க பெலன் தாரும். நாங்கள் பெற்ற அதிகாரத்தை பிசாசு, வியாதிகள் போன்றவைகள் மீது செலுத்த பெலன் தாரும்.