ஆவியும், வார்த்தையும்
God sent speaks words of God,God does not give the Spirit by measure.(John 3:34)
Jn7:16; Jn8:26-28,40,47; Jn5:26; Jn7:37-39; Jn15:26; Jn16:7; Ro8;2; Ep3:8; Ep4:7-13; Nu11:25; 2Ki2:9; Ps45:7; Isa11;2-5; Isa59:21; Isa66:1-3.
தேவனால் அனுப்பப்பட்டவர் தேவனுடைய வார்த்தைகளைப் பேசுகிறார்: தேவன் அவருக்குத் தமது ஆவியை அளவில்லாமல் கொடுத்திருக்கிறார். (யோவான் 3:34)
யோவா7:16;8:26-28,40,47;5:26;7:37-39;15:26;16:7;ரோம8;2;எபே3:8;4:7-13;எண்11:25;2இரா2:9;சங்45:7;ஏசா11;2-5;59:21;66:1-3.
ஆவியும்,வார்த்தையும்:
இயேசுகிறிஸ்து பரிசுத்த ஆவியினால் பிறந்தவர். அவரில் ஆவியர் பரிபூரணமாக வாசமாயிருந்தார். அவர் தேவனுடைய செய்தியை உடையவர். பரலோக செய்தியை உடையவர். அவர் உலகிற்கு அனுப்பபட்டவர்.
இயேசுகிறிஸ்து மூன்று காரியங்களுக்காக இவ்வுலகில் அனுப்பப்பட்டார்.
1. தேவனுடைய வார்த்தைகளை கொடுப்பதற்காக.
2. தேவனுடைய இரட்சிப்பை கொடுப்பதற்காக.
3. தேவனுடைய ஆவியை கொடுப்பதற்காக.
பரிசுத்தவான்கள் விவிலியத்தை பரிசுத்த ஆவியினால் ஏவப்பட்டு எழுதினர்.
இயேசுகிறிஸ்துவும் பரிசுத்த ஆவியினால் நிறைந்தே உபதேசித்தார்.
அப்போஸ்தலர்களும் பரிசுத்த ஆவியினால் நிறைந்தே சில காரியங்களை செய்தனர்.
1. அற்புதங்கள் செய்தனர்.
2. தேவ வார்த்தைகளை பேசினர்.
3. சபைகளை நிறுவினர்.
இக்காலத்தில் பரிசுத்த ஆவியை பெற்றேன் என்றுக்கூறிக்கொண்டு ஏற்கனவே வெளிபடுத்தபட்டவைகளுக்கு இணையாக வெளிப்பாடுகளையும், உரைகளையும் கொடுக்கின்றனர். இது தவறு.
பரிசுத்த ஆவியின் துணையின்றி எதையும் நாம் செய்ய அனுமதிக்க படமாட்டோம்.
பரிசுத்த ஆவியானவர் நம்மில் இருப்பாரானால் நாம் எவருக்காவது சுவிசேஷத்தை அறிவிக்காமல் இருக்க இயலாது. அவரின் வார்த்தைகளை ஆவியின் நிறைவினால் தான் பேச இயலும். அவரே அதற்கு வியாக்கியானி.
அவரே கிறிஸ்துவின் மாதிரியை நம்மில் கொண்டு வருகிறவர்.
வசனமும்,ஆவியும் எவரில், எங்கே, எப்பொழுது இணைந்து வருகிறதோ அங்கே அற்புதங்கள் உண்டாகும், எழுப்புதல் உண்டாகும், சத்தியம் பிரசங்கிக்கபடும், சமாதானம் வற்றாத நதியாக பாய்ந்தோடும்.
கர்த்தாவே, நாங்கள் உம்முடைய ஆவியானவரை கொண்டே கிறிஸ்துவின் வார்த்தைகளை பிறருக்கு சுவிசேஷமாக அறிவிக்க பெலன் தாரும். சாட்சியும், உரைகளும் இணைந்து செல்ல உதவும். உமது ஆவியை எங்களுக்கு அளவில்லாமல் தாரும். நாங்கள் பெலனடையட்டும்.