கேட்டதையும்

தாம் கண்டதையும், கேட்டதையும் சாட்சியாகச் சொல்லுகிறார். ஒருவரும் அதை ஏற்பதில்லை.

what He has seen and heard, that He testifies; and no one receives His testimony. (John 3:32)
Jn3:11; Jn1:11; Jn5:20; Jn8:26,38; Jn12:49; Jn14:10; Jn15:15; Jn16:13; Rom10:16-21; Rom11:2-6; Heb12:1; 1Jn4:14; 1Jn5:9; Rev1:1.

தாம் கண்டதையும் கேட்டதையும் சாட்சியாகச் சொல்லுகிறார்: அவருடைய சாட்சியை ஒருவனும் ஏற்றுக்கொள்ளுகிறதில்லை. (யோவான் 3:32)

யோவான் 3:11; யோவான் 1:11; யோவான் 5:20; யோவான் 8:26,38; யோவான் 12:49; யோவான் 14:10; யோவான் 15:15; யோவான் 16:13; ரோமர் 10:16-21; ரோமர் 11:2-6; எபிரெயர் 12:1; 1 யோவான் 4:14; 1 யோவான் 5:9; வெளி 1:1.

இயேசுவின் சாட்சி:
இயேசு கூறியுள்ள உண்மைகள் உண்மையானவை. அவர் தன் கண்களால் கண்டதையும், தன் காதுகளால் கேட்டதையும் சாட்சியாக அறிவிக்கிறார். இதனால்தான் வெளி 1:5 ல் உண்மையுள்ள சாட்சி என்று கூறப்பட்டுள்ளது. கிறிஸ்து பிதா செய்வதை கண்டார், பிதா சொல்லுவதை கேட்டார்.

ஆதியில் ஆதாமும், ஏவாளும் இந்த அனுபவத்தை பெற்றிருந்தனர். பாவம் நுழைந்தபோது தொடர்பு துண்டிக்கபட்டது. என்றாலும், மோசே போன்றவர்கள் மூலம், தீர்க்கதரிசிகள் மூலம் அதே தொடர்பை உண்டாக்கினார். முடிவில் இயேசுகிறிஸ்து மூலமாய் முழுமையான தொடர்பை ஏற்படுத்தியுள்ளார்.

ஊழியகாரன் கிறிஸ்து செய்வதையும், பேசுவதையும் பார்க்கும், கேட்கும் அனுபவம் பெற்றிருந்தால்தான் உண்மையுள்ள சாட்சியங்கள் தேசத்தில் பிறக்கும்.

ஏன் உண்மையுள்ள சாட்சியை மனுஷர் ஏற்றுக் கொள்வதில்லை?

பிசாசானவன் பொய்யனும், பொய்க்கு பிதாவுமாயிருக்கிறான். அவனுடைய ஆவி எவரில் இருக்கிறதோ அவர்கள் உண்மையை ஏற்கமாட்டார். விவிலியம் வழுவாத்தன்மை கொண்டது. அதனை விசுவாசியாதோர் சாத்தானின் ஆவி உடையவரே. கிறிஸ்து உண்மையுள்ள சாட்சி, அவரை ஏற்காதவன் பொய்யின் ஆவி உடையவனே.

கர்த்தாவே, நாங்களும் சத்தியத்தை நம்பாது பொய்யனையும், அவன் உரைகளையும் பின்பற்றி வந்தோம். கிறிஸ்து என்ற உண்மையுள்ள சாட்சி எங்களில் வந்ததினால் நாங்கள் பொய்யின் ஆவியிடமிருந்து விடுபட்டு சத்திய ஆவியை உடையவர்களானோம். தொடர்ந்து நாங்கள் சத்திய ஆவியைகொண்டு உண்மையுள்ள சாட்சிகளாய் நிற்க உதவிடும்.

ADD YOUR COMMENT

Powered By Indic IME