உங்களில் ஒருவனும் அந்த நியாயபிரமாணத்தின்படி நடக்கிறதில்லை

உங்களில் ஒருவனும் அந்த நியாயபிரமாணத்தின்படி நடக்கிறதில்லை.

Did not Moses give you the law, yet none of you keeps the law? (John 7:19)

Jn1:17; Jn5:45; Jn9:28,29; Mt23:2-4; Act7:38; Ro2:12,13,17-29; Jn3:10-23; Ga3:19; Ga6:13; Heb3:3-5; Ex24:2,3; Deu1:17; Deu33:4;  2Ki23:25; Ne10:29.

யோவான் 1:17; யோவான் 5:45; யோவான் 9:28,29; மத்தேயு 23:2-4; அப்போஸ்தலர் 7:38; ரோமர் 2:12,13,17-29; ரோமர் 3:10-23; கலாத்தியர் 3:19; கலாத்தியர் 6:13; எபிரெயர் 3:3-5; யாத்திராகமம் 24:2,3; உபாகமம் 1:17; உபாகமம் 33:4; 2 இராஜாக்கள் 23:25; நெகேமியா 10:29.

மோசேயின் நியாயபிரமாணம்:

மோசேயின் நியாயபிரமாணம் மோசே தான் கற்ற எகிப்திய கல்வியிலிருந்து அல்ல, வேறு எந்த பாரம்பரியங்களிலிருந்துமல்ல தேவனிடமிருந்து இஸ்ராயேல் ஜனங்களுக்காக பெற்றவை.

மோசேயின் பிரமாணங்களை மோசேயின் காலத்தில் இருந்த இஸ்ராயேலர் கூட முழுமையாக பின்பற்றவில்லை. இயேசுவின் காலத்தில் வாழ்ந்த இஸ்ராயேலரும் முழுமையாக பின்பற்றவில்லை. ஆனால் இயேசுகிறிஸ்து நியாயபிரமானத்தின் முடிவாயிருக்கிறார். அவர் நியாயபிரமாணத்தை நிறைவேற்றினார். இயேசுகிறிஸ்துவில் நியாயபிரமாணம் நிறைவுபெற்று ஜனங்களுக்கு இரட்சிப்பாய் அமைந்தது.

நியாயபிரமாணம் என்பது இஸ்ராயேலர் தேவனுக்கு ஏற்றபடி தேவனுடைய மார்க்கத்திலே நடப்பதற்காக தரப்பட்ட வாழ்க்கை, சமுதாயம், சமய முறைகளாகும்.

நியாயபிரமாணம் தேவனுடைய இருதயத்தின் வெளிப்பாடு.

பாவத்தினால் உருக்குலைந்துபோன சமுதாயத்தை சீர் செய்வதற்காக கொடுக்கப்பட்ட வாழ்க்கைமுறை. இயேசுகிறிஸ்து இதனை நிறைவேற்றியிருப்பதினால் நாம் இதனை பின்பற்றலாகாது என்று கூறமுடியாது.
நியாயபிரமாணத்தின் சட்ட விதிகள் யாவும் இயேசுவால் பின்பற்றபட்டது.
ஆதிசபையும் பின்பற்றியது.
நாமும் பின்பற்றவேண்டும்.
யூத சமுதாயத்தில் சேருதல், சில சடங்கு முறைகள், பலிகள், விருத்தசேதனம் போன்ற சில முறைகள் மாற்றம் பெற்றுள்ளதினால் அவைகள் தவிர்க்கப்படலாம்.
ஒரே தேவன், ஒரே விவிலியம் என்றால் நமது சமுதாய எழுச்சிக்கு தேவையான ஆகம விதிகளை பின்பற்றுவது நல்லது.

கர்த்தாவே, உம் குமாரன் மூலமாக எங்களை இரட்சித்திருந்தாலும் உமது உள்ளத்தின் வெளிப்பாடாகிய நியாயபிரமாணத்தை விட்டுவிடாமல் பயன்படுத்திகொள்ள உமது ஆவியால் எங்களை பலபடுத்தும்.

ADD YOUR COMMENT

Powered By Indic IME