என் மாம்சம் மெய்யான போஜனம், என் இரத்தம் மெய்யான பானம்.
For My flesh is food indeed, and My blood is drink indeed. (John 6 :55)
Jn6:32,47,53; Jn8:31,36; Jn15:1; Heb8:2; 1Jn5:6,20; Deu32:13-15; Ps4:7.
என் மாம்சம் மெய்யான போஜனமாயிருக்கிறது, என் இரத்தம் மெய்யான பானமாயிருக்கிறது.
(யோவான் 6:55)
யோவான் 6:32,47,53; யோவான் 8:31,36; யோவான் 15:1; எபிரெயர் 8:2; 1 யோவான் 5:6,20; உபாகமம் 32:13-15; சங்கீதம் 4:7.
மெய்யான உணவு:
இயேசுகிறிஸ்து மூன்றுவிதமான உணவுகளை ஒப்புமைபடுத்தி தன் சரீரம், இரத்தம் என்பது மட்டுமே மெய்யான உணவு என்றார்.
அந்த மூன்று உணவுவகைகளாவன.
- இயற்கை உணவு. இது இயற்கையாக கிடைப்பதாக இருக்கலாம், செயற்கையாக கிடைப்பதாகவும் இருக்கலாம். இந்த உணவுகள் மனிதனை நீண்டகால வாழ்வுக்கு – மெய்வாழ்வுக்கு இட்டு செல்லாது.
- சாத்தானின் கூட்டத்தோடு இணைந்து பெறப்படும் உணவுகள். விக்கிரகங்களுக்கு படைக்கபட்டவைகள், யாகபலிபொருட்கள் முதலியன. இவைகளினாலும் மெய்வாழ்வுக்கு வரவியலாது.
- பழைய ஏற்பாட்டின் பலி உணவுகள். இந்த பலி உணவுகள் யாவும் மெய்வாழ்வின் உணவுக்கு நிழலாட்டமே தவிர இவைகளும் மெய் உணவல்ல.
கர்த்தராகிய இயேசுகிறிஸ்து தன் சரீரத்தையும், இரத்தத்தையும் உணவாக தருகிறார்.
அதுவே மெய்யான – உண்மையான – மாறுபாடில்லாத – பேதமில்லாத – ஆசீர்வதமான உணவு.
மெய்யானவர் மட்டுமே மெய் உணவை தர இயலும்.
பொய்மையின் உலகமும், மனிதர்களும் தருகிறவைகள் பொய் உணவாகவே இருக்கின்றது.
ஜீவகரை சேர்ப்பதே ஜீவ உணவு..
சத்திய வெளிச்சம் தருவதே சத்திய உணவு…
பரகதி சேர்ப்பதே நித்திய உணவு.
இந்த உணவை அவர் தருகிறார்..
எனவே அவரோடு நல்ல உறவில் வாழுங்கள்.
அவரை அனுபவியுங்கள்.
ருசித்து பாருங்கள்.
மெய் உணவின் தன்மையை அடைவீர்.
கர்த்தாவே, உம் மகனை எங்களுக்கு மெய்யான உணவாக தந்ததற்காய் நன்றி. உலகின் உணவு வகைகள் யாவையும் தந்தும் நாங்கள் ஜீவகரை வர இயலாது போனதினால் இந்த மெய் உணவை தந்திருக்கின்றீர். இதை உண்டு நாங்கள் மெய்வாழ்வு அடைய உதவிடும்.