உங்கள் பிதாக்கள் வனாந்தரத்தில் மன்னாவை புசித்திருந்தும் மரித்தார்கள்.
Your fathers ate the manna in the wilderness,and are dead. (John 6:49)
Exo16:12-36; Num26:65; Pro9:1-6; Zec1:5; 1Cor6:13; 1Cor 10:3-5; Heb3:15-19; Juda1:5.
உங்கள் பிதாக்கள் வனாந்தரத்திலே மன்னாவைப் புசித்திருந்தும் மரித்தார்கள். (யோவான் 6:49)
யாத்திராகமம் 16:12-36; எண்ணாகமம் 26:65; நீதிமொழிகள் 9:1-6; சகரியா 1:5; 1கொரிந்தியர் 6:13; 1கொரிந்தியர் 10:3-5; எபிரெயர் 3:15-19; யூதா 1:5.
மன்னாவும் மரணமும்:
மன்னா அது தேவனுடைய ஈவு, கிருபை, கொடை, உணவு ஆகும். தேவனிடமிருந்து மனிதர்க்கு கொடுக்கப்பட்டது. வழிபோக்கர்களுக்கல்ல, நியாயபிரமாணத்தின் மக்களாகிய ஆபிரகாமின் வழிதோன்றலாகிய இஸ்ராயேலருக்கு கொடுக்கப்பட்டது.
மன்னா கொடுக்கபட்டதின் பின்னணியத்தை ஆராய்ந்தால் இஸ்ராயேலரின் அவநம்பிக்கையின் உளையாகிய முறுமுறுப்பு மையம் கொண்டுள்ளது. இஸ்ராயேலர் முறுமுறுத்தார்கள். யாத்திராகமம் 16:13. முறுமுறுப்பை ஒழியபண்ணவே
தேவன் மன்னாவை கொடுத்தார். முறுமுறுப்பை ஒழியபண்ண கொடுத்த மன்னாவே பின்னாட்களில் முறுமுறுப்பை வரவழைத்தது. அழிக்கவும் பட்டார்கள். தேவன் கொடுத்த உணவை நன்றாக உண்டும் முறுமுறுப்பை ஒழித்துவிடாதிருந்ததினால் மன்னாவை தின்ற இருவர் தவிர எல்லாரும் வனாந்தரத்தில் மரித்தார்கள்.
அன்பானவர்களே!…
நாம் வாதாடி, போராடி, உபவாசமிருந்து உணவு, உடை, உறைவிடம், வரங்கள், பணம், மண், பொன், பதவி, ஆடம்பரம் போன்றவைகளை பெற்றுக்கொள்கிறோம். ஆண்டவரும் நமது போராட்டகுணத்தினிமித்தம் கேட்பதை தருகிறார். ஆனால் கூடவே இளைப்பையும் அனுப்புகிறார் என்பதை மறக்க வேண்டாம். இஸ்ராயேலைபோல நாமும் திருப்தியற்று காணப்படுகிறோம். இதனால் வியாதிகளும், விபத்துகளும், கடன்களும் உண்டாகி திரும்பவும் அவிசுவாசத்தின் விளிம்புக்கு வருகிறோம். இது தவறானது.
தேவனிடமிருந்து வரும் எந்த ஒன்றும் இலவசமானது.
அவருக்கு சித்தமானவர்களுக்கு அவர் கொடுப்பது.
உரிமைகோரி பெறுவதல்ல, உறவுகொண்டு பரிசு பெறுவது. தேவனோடு – குமாரனோடு – ஆவியோடு உங்களுக்கு நல்ல உறவு இருக்குமானால் உலகியல் காரியங்களுக்காய் நாம் அவரிடம் போராடமாட்டோம்.
யாக்கோபு போராடி சுளுக்கை பெற்றான். இஸ்ராயேலர் இச்சையினால் கேட்டார்கள். பெற்றார்கள். அழிவையும் அனுபவித்தார்கள்.
நாம் இச்சைகொண்டு ஜெபிக்கிறோம், உபவாசிக்கிறோம்.
நம் தகப்பனாகிய அவருக்கு தன் பிள்ளைக்கு எப்பொழுது கொடுக்கவேண்டும் என்று தெரியும்.
உலகியல் காரியங்களுக்காய் உன்னதருடன் போராடாதே. விசுவாசத்தினால் – நல்ல உறவினால் கிடைப்பது வேறு, விசுவாசத்தை உருவாக்க – உறவை உருவாக்க கொடுப்பது வேறு.
தேவனிடம் சொல்லிவிட்டால் பொறுத்திருங்கள்.
உனக்கு அவர் தர விருப்பம் கொண்டால் நிச்சயம் தருவார்.
நான் உலகியல் காரியங்களுக்காய் ஆண்டவரிடம் போராடுவதில்லை. ஆனால் எல்லாவற்றிலும் அவர் என்னை நன்றாய் நடத்துகிறார். ஞானம் தருகிறார். அதைகொண்டு செயல்படுகிறேன்.
இது ஒரு பெரிய பாடம். அவர் பள்ளியில் படித்தால் மட்டுமே இப்பாடம் புரியும். இல்லையெனில் இஸ்ராயேலரைபோலாவோம்.
கர்த்தாவே, நாங்கள் உம் குமாரனில் இணைந்து, வாழ்ந்து, சந்தோஷித்து அதினிமித்தம் நன்மைகளைபெற எங்களுக்கு கற்று தருவதற்காய் நன்றி. அழியும் பொருளுக்காய் விழிபிதுங்கி நில்லாது, அழியாமையை சுதந்தரிக்க விழித்து நிற்க உதவும்.