பூமிக்கடுத்த காரியங்கள்

பூமிக்கடுத்த காரியங்களை சொல்லியும் விசுவாசிக்காத மக்கள்.

I have told you earthly things and you do not believe, (John 3:12a)
Jn3:31; Jn6:46,60-66; 1Cor3:1,2; Heb5:11; 2Pet3:15,16

பூமிக்கடுத்த காரியங்களை நான் உங்களுக்குச் சொல்லியும் நீங்கள் விசுவாசிக்கவில்லையே, பரமகாரியங்களை உங்களுக்குச் சொல்வேனானால் எப்படி விசுவாசிப்பீர்கள்? (யோவான் 3:12)

யோவாள3:31; யோவான் 6:46,60-66; 1கொரிந்தியர் 3:1,2; எபிரெயர் 5:11; 2 பேதுரு 3:15,16.

பூமிக்கடுத்த காரியங்கள்:

சிலர்இயேசு பேசிய ஆவிக்குரிய இரகசியங்களை யாவரும் எளிதில் புரிந்து கொள்ளும் விதத்தில் பூமியிலிருந்துள்ள உவமைகள், பொருள்கள் மூலமாக விளக்கினார் என்கின்றனர்.

இன்னும் சிலர் மறுபிறப்பு, பரலோக நுழைவு வாயில் போன்ற எளிதில் நிக்கொதேமு போன்றவர்கள் அறிந்தவைகளை புரிந்துகொள்ளும்படி பேசினார் என்கின்றனர்.

இன்னும் சிலர் எளிதான சத்தியங்களை இயேசு பேசினார். அதையே அவர்கள் புரிந்து கொள்ளவில்லை என்கின்றனர்.

பூமிக்கடுத்த காரியங்கள்:

விவிலியத்தில் பல பொருள்களில் இச்சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது.
1. இயேசு பேசிய பூமிக்கடுத்த காரியம். யோவான் 3:12
2. பூமியிலிருந்துண்டானவனால் பேசப்படுகிற பூமிக்குரிய காரியங்கள். யோவான் 3:31
3. வேறுவிதமாய் நடப்போர் பூமிக்கடுத்தவைகளை சிந்திக்கிறார்கள். பிலிப்பியர் 3:19
4. பூமியிலுள்ளவைகள் பூமிக்குரியவைகள் எனப்படுகிறது. கொலோசெயர் 3:1,2

இயேசு கூறிய பூமிக்கடுத்த காரியங்கள்…
– இது அஸ்திபார உபதேசங்கள் எனலாம். எபிரெயர் 6:1,2
– இது பரலோகத்துக்கு போகவேண்டிய மனிதன் இப்பூமியில் வாழ்வதற்குரியதானது.
– இது பரலோகில் உள்ளவைகளல்ல, ஆனால் பரலோகத்தினுள் நுழைவதற்கு அவசியமானது.

நாமும் இப்பூமியின் பொல்லாத வழிகளை விட்டு பரலோகத்துக்கு சென்று அங்குள்ளவைகளை அறிவதற்கான சாதாரண விஷயங்களாகிய மனந்திரும்புதல், கிறிஸ்தவ ஐக்கியம், சபை வாழ்வு, விசுவாசம் போன்றவைகளில் செம்மையாக வாழ முக்கியத்துவம் கொடுப்பதில்லை. இது தவறு.
இங்கு வாழும் வரையிலும் இவைகள் பாரம்பரியங்கள் என ஒதுக்காது கடைபிடித்து வாழ பிரயாசப்படுவோம்..

கர்த்தாவே, நாங்கள் எங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள இந்த பூமிக்குரிய வாழ்வில் பரிசுத்த வாழ்வாகிய பரலோகத்தில் வாழ்வதற்கான வழிகளைசெவ்வையாய் கைக்கொண்டு வாழ பிரயாசப்பட உதவி செய்யும்.

ADD YOUR COMMENT

Powered By Indic IME