மாம்சத்தினால் பிறப்பது மாம்சமாயிருக்கும்

மாம்சத்தினால் பிறப்பது மாம்சமாயிருக்கும்.

That which is born of the flesh is flesh. (Jn3:6 a)
Ro7:5,18,25;8:1,4,5-9,13; 9:8; 1Co1:26; 3:3,4;2Co10:2,3;11:18;12:7;Gal2:20;3:34:29; 6:8,12; 2Pet2:10; 1Jn2:16; 4:2,3; 2Jn1:7.

மாமிசத்தினால் பிறப்பது மாம்சமாயிருக்கும், ஆவியினால் பிறப்பது ஆவியாயிருக்கும். (யோவான் 3:6)

ரோமர் 7:5,18,25; ரோமர் 8:1,4,5-9,13; ரோமர் 9:8; 1கொரிந்தியர் 1:26; 1 கொரிந்தியர் 3:3,4; 2கொரிந்தியர் 10:2,3; 2 கொரிந்தியர் 11:18; 2 கொரிந்தியர் 12:7; கலாத்தியர் 2:20; கலாத்தியர் 3:34: கலாத்தியர் 29; கலாத்தியர் 6:8,12; 2 பேதுரு 2:10; 1 யோவான் 2:16; 1 யோவான் 4:2,3; 2 யோவான் 1:7.

விவிலியத்தில் மாம்சம் குறித்த சில விஷயங்கள்.
– மாம்சம், இரத்தம் ஆவிக்குரியதை வெளிபடுத்தாது. மத்தேயு 16:17
– மாம்சம் பலவீனமானது. மத்தேயு 26:41
– மாம்சத்தினால் பிறப்பது வேறு, ஆவியினால் பிறப்பது வேறு. யோவான் 1:13
– மாம்சம் ஒன்றுக்கும் உதவாது. யோவான் 6:63
– மாம்சத்தில் நன்மை வாசமாய் இருப்பதில்லை. ரோமர் 7:18
– மாம்ச சிந்தை மரணம். ரோமர் 8:6
– மாம்ச சிந்தை தேவனுக்கு விரோதமான பகை. ரோமர் 8:7
– மாம்சத்துக்குட்பட்டோர் தேவனுக்கு பிரியமாயிரார். ரோமர் 8:8
– மாம்சத்தின்படிபிழைத்தால் மரணம். ரோமர் 8:13
– மாம்சம், இரத்தம் தேவனுடைய இராஜ்ஜியத்தை சுதந்தரிக்காது. 1கொரிந்தியர் 15:50
– மாம்சபடி பிறந்தவன் ஆவியின்படி பிறந்தவனை துன்புறுத்துவான். கலாத்தியர் 4:20
– மாம்சத்தின் கிரியைகள் வெளியரங்கமானது. கலாத்தியர் 58:19
– மாம்சத்திலே விதைக்கிறவன் அழிவை அறுப்பான். கலாத்தியர் 6:8
– மாம்சம் புல்லைபோல உலரும். 1 பேதுரு 1:24.
– மாம்ச இச்சை உலகத்தால் உண்டானது. 1 யோவான் 2:16

மாம்சத்தினால் பிறப்பது மாம்சமே.
– இது இயற்கையான பிறப்பை குறிக்கின்றது.
– இது இயல்பாய் பிறந்து பாவத்தை பின்தொடர்தலை குறிக்கின்றது.
– இது இயல்பாய் பிறந்து உலக காரியங்களை தன்னத்தே கொண்டு வாழ்தலை குறிக்கின்றது.
– இது இயல்பாக பிறந்து மாம்சீக சுபாவங்களை தன்னில் கொண்டிருத்தலை குறிக்கின்றது.

கர்த்தாவே, நாங்கள் மாம்சத்தின்படி பிறந்து மாம்சத்துக்குரியவர்களாகவும், மாம்ச சுபாவத்திலே வேர் கொண்டவர்களாகவும் இருக்கிறபடியால் எங்கள் மாம்ச சுபாவத்திலிருந்து விடுதலையாக்கி உமது பிள்ளைகளாக வாழ அருள்புரியும்.

ADD YOUR COMMENT

Powered By Indic IME