தேவாலயம் அது என் பிதாவின் வீடு.
புறாவிற்கிறவர்களை நோக்கி: இவைகளை இவ்விடத்திலிருந்து எடுத்துக்கொண்டுபோங்கள், என் பிதாவின் வீட்டை வியாபார வீடாக்காதிருங்கள் என்றார். (யோவான் 2:16)
ஏசாயா 56:5-7; எரேமியா 7:11; நெகேமியா 6:10; சங்கீதம் 135:2; மத்தேயு 12:14; மத்தேயு 21:13; மாற்கு 11:17; யோவான் 14:2; 1தீமோத்தேயு 3:15; எபிரெயர் 3:2; எபிரெயர் 10:21; 1 பேதுரு 4:17.
தேவாலயம் என்பது
1.பிதாவின் வீடு. எருசலேம் தேவாலயம் பிதாவின் வீடாக அறியபட்டுள்ளது.
2.கிறிஸ்துவின் சரீரமாகிய சபை. இயேசு கிறிஸ்துவினால் உருவாக்கப்பட்ட புதிய ஏற்பாட்டின் ஆலயங்கள் யாவும் கிறிஸ்துவின் சபை என்று அழைக்கப்படுகிறது.
3.பரிசுத்த ஆவியின் ஆலயம். நமது சரீரங்களும்,உள்ளமும் பரிசுத்த ஆவியானவர் தங்கும் ஆலயம் என்று அழைக்கப்படுகிறது.
4.கைகளால் கட்டப்படாத பரலோக வீடாகிய தேவன் தங்கும் ஸ்தானமும் பிதாவின் வீடாக அழைக்கப்படுகிறது.
கர்த்தராகிய இயேசுவே நாங்கள் உம்மால் மீட்கபட்டு உமது தந்தையின் வீட்டில் எங்களை அழைத்து வந்து எங்களை மகிழ பண்ணுவதற்காக உமக்கு நன்றி.