கானாவூர்
யோவான் 2:1-7
கானாவூர் – special 1
1. இயேசுவை ஏற்றுக்கொண்ட கலியாண வீடு.
அவர் உன் வாசலை தட்டுகிறார். வெளி 3:20; உன்னதப்பாட்டு 5:2
அவரை உள்ளே அழைத்துக்கொள். சகேயுவை போல.
அவர் உன்னோடு போஜனம் செய்வார். யோவான் 14:23
2. குறைவுபட்ட கலியாண வீடு. இயேசு நம் வீட்டில் வந்தால் குறைவு வருமா? ஆம், ஆம் எனில்ஏன்?
அவர் குறைவை நிறைவாக்குகிறவர் என்று வெளிப்படும் படியாய்.
என்ன குறை? திராட்சை ரசம் இல்லை.
– குடும்பத்தில் திராட்சை செடி யார்? மனைவியானவள். சங்கீதம் 128.
அவளிடமிருந்து குடும்பத்துக்கு தேவையான திராட்சை ரசம் கிடைக்க வேண்டும்.
– திராட்சை ரசம் – ஜெபம் நிறைந்த வாழ்வு – கனி நிறைந்த வாழ்வு. வீட்டம்மா எவ்வளவு ஜெபிக்கிறாங்களோ அவ்வளவாய் அவ்வீட்டில் திராட்சை ரசம் குறைவு படாது.
குறைவை எங்கே கூறுவது? குறைவை இயேசுவிடம் கூறு.
– பாரத்தை அவர் மேல் வைக்கலாம். சங்கீதம் 55:22
– குறைவை அவரிடம் கூறலாம். 1இராஜாக்கள் 17:14
ஆனால் ஒரு எச்சரிக்கை. உன் குறைவுகள் அவரின் வேளையிலேதான் சரி செய்யப்படும்.
இயேசு – என் வேளை இன்னும் வரவில்லை. அவர் வேளை வருவது வரையிலும் நாம் அமைதியாயிருக்கலாகாது. ஏசாயா 62:1,6,7; புலம்பல் 3:49,50; இயேசு – லூக்கா 18:1; பவுல் – பிலிப்பியர் 4:6
குறைவை சரிசெய்ய என்ன செய்யவேண்டும்?
உன் குறைவுகள் சரி செய்யப்பட அவர் என்னச் சொல்லுகிறாரோ அதன் படி செய்.
மோசே கூறுகிறார். உபாகமம் 7:12; உபாகமம் 13:4; இயேசு கூறுகிறார். மத்தேயு 7:24
யோவான் எழுதுகிறார். 1 யோவான் 1:1,2;
பவுல் சொல்லுகிறார். பிலிப்பியர் 4:19
குறைவு உண்டாயிற்று. இனி அவர் அதை பார்த்துக் கொள்வார். நீ குறைவை பற்றி சிந்திக்காதே.அவர் செய்ய போகிற பெரிய காரியங்களை குறித்து சிந்தி.
இந்த கானாவூர் அனுபவம் நமது வீட்டிலும் வாழ்விலும், பணியிலும் அரங்கேறட்டும்.
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.