அவர் உங்களுக்கு என்ன சொல்லுகிறாரோ, அதன்படி செய்யுங்கள்

அவர் உங்களுக்கு என்ன சொல்லுகிறாரோ, அதன்படி செய்யுங்கள்.

அவருடைய தாய் வேலைக்காரரை நோக்கி: அவர் உங்களுக்கு என்ன சொல்லுகிறாரோ, அதன்படி செய்யுங்கள் என்றாள். (யோவான் 2:5)

யோவான் 15:14; லூக்கா 5:5,6; லூக்கா 6:46-49; அப்போஸ்தலர் 9:6; பிலிப்பியர் 4:9; எபிரெயர் 5:7-9; எபிரெயர் 11:8; ஆதியாகமம் 6:22; யாத்திராகமம் 4:4; நியாயாதிபதிகள் 13:13,14.

– மரியாள் இதை தன் குடும்பத்தில் அனுபவித்ததினால்தான் இவ்வாறு வேலைக்காரரிடம் கூறினாள்.
– தன் பெற்றோருக்கு கீழ்படிந்த நல்ல தகப்பன் தன் பிள்ளைகளிடம் கீழ்படிய வேண்டிய இடத்தில் கீழ்படியும்படி கற்றுக்கொடுப்பான்.
– தேவனுக்கு கீழ்படியும் நல்ல ஊழியன் தன் சபையார் – தன் குடும்பத்தார் தேவனுக்கும், தனக்கும், சபை நிர்வாகத்துக்கும், பெரியோர்களுக்கும் கீழ்படிய கற்றுக்கொடுப்பான்.
– உபாகமம் செவிகொடுத்தலை பற்றியும், செய்ய வேண்டியவைகளையும் ஆசீர்வாதத்திற்கான நிபந்தனையாய் சுட்டிகாட்டுகிறது. உபாகமம் 28
– இயேசுகிறிஸ்து பிதாவுக்கு கீழ்படிந்து அவர் சொன்னவைகளை செய்தார்.
– அவரின் குடும்பம், சீஷர்கள் இயேசுவுக்கு கீழ்படிந்து அவர் சொன்னவைகளை செய்தனர்.
– சபையார் சீஷர்கள் சொன்னதை கேட்டு அவருக்கு கீழ்படிந்து செய்தனர்.
– இன்று நாம் எவருக்கும் கீழ்படிவதும் இல்லை. பெரியோர்கள் சொல்வதை கேட்பதும் இல்லை. ஆனால், ரிஷிகள் சொல்வதை நம்புகின்றனர். சித்தர்கள் சொல்வதை நம்புகின்றனர். வேதங்கள் சொல்வதை நம்புகிறனர்.
குல தலைவர்கள் – சமூகவியலாளர்கள் – அரசியல் தலைவர்கள் – விஞ்ஞானிகள் சொல்வதை நம்புகின்றனர்.

ஆனால்,

– விவிலியம் சொல்வதை நம்பார். அதன்படி செய்யார்.

– சபை கிறிஸ்துவுக்கு கீழ்படிந்து கிறிஸ்து சொல்வதை செய்ய அழைக்கபட்டுள்ளது.

– குடும்பம் சபைக்கு கீழ்படிந்து சபை சொல்வதை செய்ய அழைக்கப்பட்டுள்ளது.

– இயேசு தம் மரணம் வரையிலும் கீழ்படிந்தார். அவர் உயர்த்தப்பட்டார்.

– கீழ் படியை மிதிக்காமல் மேல் படிக்கு போகவியலாது.

ADD YOUR COMMENT

Powered By Indic IME