தேவன் நமக்கு நித்திய ஜீவனை தந்துள்ளார்.
And this is the testimony: that God has given us eternal life, and this life is in His Son. (1John 5:11)
1John 5:13; 1John 2:25; Matthew 25:46; John 3:15,16,36; John 4:36; John 6:40,47,68; John 10:28; John 12:50; John 17:2,3; Romans 5:21; Romans 6:23; 1Timothy 1:16; Jude 1:21.
தேவன் நமக்கு நித்தியஜீவனைத் தந்திருக்கிறார், அந்த ஜீவன் அவருடைய குமாரனில் இருக்கிறதென்பதே அந்தச் சாட்சியாம். (1 யோவான் 5:11)
1யோவான் 5:13; யோவான் 2:25; மத்தேயு 25:46; யோவான் 3:15,16,36; யோவான் 4:36; யோவான் 6:40,47,68; யோவான் 10:28; யோவான் 12:50; யோவான் 17:2,3; ரோமர் 5:21; ரோமர் 6:23; 1தீமோத்தேயு 1:16; யூதா 1:21.
கிறிஸ்துவில் நித்திய ஜீவன்.
இயேசு ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்பதுவே தேவனுக்கும் குமாரனுக்கும் உள்ள பிரிக்கவியலாத உறவைக் குறிக்கின்றதாயுள்ளது. தேவன் தமது குமாரனில் தமது ஜீவனை வைத்துள்ளார். இந்த ஜீவனே நித்திய ஜீவன் ஆகும். இயேசு தேவனின் நித்திய ஜீவனை சுமந்து வந்தார். ஆதியில் ஆதாம் ஏவாளில் கொடுத்த ஜீவனும் தேவனின் ஜீவனே. அவர்கள் தேவனுடைய கற்பனைகளைவிட்டு விலகிப்போனதினால் நித்தியத்துக்கு ஏதுவான ஜீவன் மரணத்தில் மையம் கொண்டு மரணத்திலே முடிந்து போனது. ஆகவே மனிதருக்கு நித்திய ஜீவனைக் கொடுக்க தேவன் மறுபடியும் சித்தம் கொண்டு தமது ஜீவனை கிறிஸ்துவில் வைத்தார். இயேசு கிறிஸ்து பிதாவின் கட்டளைகளுக்குக் கீழ்படிந்து இந்த நித்திய ஜீவனை சுதந்தரமாகப் பெற்றுள்ளார். கிறிஸ்துவில் உள்ள நித்திய ஜீவன் அவரைப் பின்பற்றுகிற ஒவ்வொருவருக்கும் சொந்தமாகும்.
தேவன் தமது குமாரனில் வைத்துள்ள நித்திய ஜீவனை நமக்கு தருகின்ற வழிமுறைகள் என்ன? விசுவாசம் என்பது மட்டுமே வழிமுறையாக இருக்கிறது. விசுவாசம் என்பது இயேசு ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று நம்பி அறிக்கையிடுவது ஆகும். இந்த விசுவாசம் எவரொருவரில் உள்ளதோ அவர்களுக்கு தமது ஜீவனைக் கொடுக்கிறார். வேறு எந்த வழியிலும் கொடுக்கப்படுவதில்லை. பிரமாணத்தை பின்பற்றுகிறவர்கள் கூட இயேசுவே ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று நம்பி அறிக்கையிட்டால் மட்டுமே இந்த நித்திய ஜீவனை பெறமுடியும். இந்த விசுவாசம் நமக்குள் நிலைநிற்கவே தேவன் தமது ஆவியை நமக்கு தந்துள்ளார். இந்த ஆவியினாலே இயேசுவை ஜீவனுள்ள தேவனுடைய குமாரன் என்று அறிக்கையிடுகிறோம். இந்த ஆவியினாலே இயேசுவின் கட்டளைகளை பின்பற்றுகிறோம். இந்த விசுவாசம் நமக்குள் வருவதினால் கிறிஸ்து நமக்குள் வாழ்கிறார். அவர் நமக்குள் வாழ்வதினால் தேவனுடைய பிரமாணங்களை நாம் பின்பற்றுகிறவர்களாகின்றோம். முன்பு பாரமாயிருந்தவைகள் இப்பொழுது லகுவாகின்றது. சடங்குகளும் சம்பிரதாயங்களும் களையபட்டு பிரமாணம் உயிரோட்டம் பெறுகின்றது.
கிறிஸ்துவில் தேவன் வைத்துள்ள நித்திய ஜீவன் கிறிஸ்துவை ஜீவனுள்ள தேவனுடைய குமாரன் என்று விசுவாசிக்கிற ஒவ்வொருவருக்குள்ளும் வருகின்றது. எனவே இயேசுவை விசுவாசிக்காமல் ஒருவரும் பிதாவினிடம் செல்லவியலாது. பழைய ஏற்பாட்டின் பரிசுத்தவானகளில் கூட வைக்கப்படாத நித்திய ஜீவன் இயேசுவில் வைக்கப்பட்டுள்ளது. ஆகவே நித்திய ஜீவனைக் கொண்டிராத பழைய ஏற்பாட்டின் பரிசுத்தவான்களை நாம் பிரசங்கிக்கவியலாது. அவர்கள் தங்களின் மரணத்துக்குபின்புதான் நித்திய ஜீவனைப் பெற்றார்கள். ஆகவே இயேசுவை மட்டுமே நாம் பிரசங்கிக்க வேண்டும். அவர்கள் யாவரும் புதிய ஏற்பாட்டின் பரிசுத்தவான்களும் திருஷ்டாந்தங்களாகவே உள்ளனர்.
சத்தியம் என்பது இயேசுவை ஜீவனுள்ள தேவனுடைய குமாரன் என்று விசுவாசிப்பதேயாகும்.
அதற்கு அவர்கள் நீர் யார் என்றார்கள். இயேசு அவர்களை நோக்கி: நான் ஆதிமுதலாய் உங்களுக்குச் சொல்லியிருக்கிறவர்தான். உங்களைக்குறித்துப் பேசவும் நியாயந்தீர்க்கவும் எனக்கு அநேக காரியங்களுண்டு. என்னை அனுப்பினவர் சத்தியமுள்ளவர்; நான் அவரிடத்தில் கேட்டவைகளையே உலகத்துக்குச் சொல்லுகிறேன் என்றார். பிதாவைக்குறித்துப் பேசினாரென்று அவர்கள் அறியாதிருந்தார்கள். ஆதலால் இயேசு அவர்களை நோக்கி: நீங்கள் மனுஷகுமாரனை உயர்த்தின பின்பு, நானே அவரென்றும், நான் என்சுயமாய் ஒன்றும் செய்யாமல், என் பிதா எனக்குப் போதித்தபடியே இவைகளைச் சொன்னேன் என்றும் அறிவீர்கள். என்னை அனுப்பினவர் என்னுடனேகூட இருக்கிறார், பிதாவுக்குப் பிரியமானவைகளை நான் எப்பொழுதும் செய்கிறபடியால் அவர் என்னைத் தனியே இருக்கவிடவில்லை என்றார். இவைகளை அவர் சொல்லுகையில், அநேகர் அவரிடத்தில் விசுவாசம் வைத்தார்கள்.
இயேசு தம்மை விசுவாசித்த யூதர்களை நோக்கி: நீங்கள் என் உபதேசத்தில் நிலைத்திருந்தால் மெய்யாகவே என் சீஷராயிருப்பீர்கள்; சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும் என்றார். யோவான் 8:25-32.