மனுஷருடைய சாட்சியிலும் தேவனுடைய சாட்சி அதிகமாயிருக்கிறது.

If we receive the witness of men, the witness of God is greater; for this is the witness of God which He has testified of His Son. (1John 5:9)

John 3:32,33; John 5:31-36,39; John 8:17-19; John 10:38; Acts 5:32; Acts 17:31; Hebrew 2:4; Hebrew 6:18; Matthew 3:16,17; Matthew 17:5.

நாம் மனுஷருடைய சாட்சியை ஏற்றுக்கொண்டால், அதைப்பார்க்கிலும் தேவனுடைய சாட்சி அதிகமாயிருக்கிறது. தேவன் தமது குமாரனைக்குறித்துக் கொடுத்த சாட்சி இதுவே. (1 யோவான் 5:9)

யோவான் 3:32,33; யோவான் 5:31-36,39; யோவான் 8:17-19; யோவான் 10:38; அப்போஸ்தலர் 5:32; அப்போஸ்தலர் 17:31; எபிரேயர் 2:4; எபிரேயர் 6:18; மத்தேயு 3:16,17; மத்தேயு 17:5.

குமாரனைக் குறித்த சாட்சி.

இயேசு கிறிஸ்துவை ஆண்டவர் என்றும், உலக இரட்சகர் என்றும், மேசியாவாகிய கிறிஸ்து என்றும் மனிதர்கள் சாட்சிக் கொடுக்கிறார்கள். அவர் தேவகுமாரன் என்றும் மிகச்சிறந்த மனிதர் என்றும் சாட்சிக் கொடுக்கிறார்கள், இரட்சிக்கப்பட்டவர்களும், இரட்சிக்கப்படாதவர்களும் சாட்சிக் கொடுக்கிறார்கள். இந்த சாட்சிகளை விடவும் தேவன் தமது குமாரனைக் குறித்து கொடுத்துள்ள சாட்சியே மேன்மையான சாட்சி என்றுக் கூறுகின்றார்.

பிசாசுகளும் இயேசுவின் பலத்த கிரியைகளுக்கு முன்பாக நிற்க முடியாமல் இயேசுவை தேவனுடைய குமாரன் என்று சாட்சிக் கொடுத்தது. இந்த சாட்சிகளைவிடவும் தேவனுடைய சாட்சியே மேலானது.

இயேசுவுக்கு முன்னோடினவரும், எலியாவின் ஆவியை உடையவரும், இயேசுவுக்கு திருமுழுக்கு கொடுத்தவரும், இயேசுவை இன்னார் என்று பகிரங்கமாக அறிவித்து உயிருள்ள சாட்சியாய் – இரத்த சாட்சியானவருமாகிய முழுக்குநர் யோவான் கொடுத்த சாட்சிகளை விடவும் தேவனின் சாட்சி மேலானது.

இயேசுவைக் குறித்து இயேசுவின் பிறப்பின் காலத்தில் மரியாள் யோசேப்பிடமும், திருமுழுக்கின்போது யோவான் முன்னிலையிலும், மறுரூப மலையின் அனுபவத்தின்போது பிரதான சீஷர்கள் மத்தியிலும் பிதாவாகிய தேவன் தமது குமாரனை குறித்து சொன்ன சாட்சியே எல்லா சாட்சிகளிலும் மேலான சாட்சியாகும்.

இவ்விதமான அனைத்து சாட்சிகளையும் ஒருமிக்க பதிய வைத்துள்ள தேவனுடைய வார்த்தையாகிய விவிலியமானது இயேசு கிறிஸ்துவை குறித்து கொடுக்கும் சாட்சியே உன்னதமானதாகும். ஆகையினால்தான் தேவன் வேதத்தை உறுதிபடுத்தியுள்ளார். விவிலியமானது தேவனுடைய சாட்சிகளின் தொகுப்பாகும். நாம் இயேசு கிறிஸ்துவிலும் பிதாவாகிய தேவனிடத்திலும் பற்றுறுதிக் கொண்டு சாட்சியாய் வாழ்வதற்குரிய அரிய பொக்கிஷமாகும். யோவான் 20:31. இந்த சாட்சி பெட்டகத்தை பரிசுத்த ஆவியானவரே கையாளுகின்றார். அவருடைய ஆவி இல்லாமல் விவிலியத்தில் பதிந்துள்ள சாட்சிகளை புரிந்துக் கொள்ளவும், நம்பவும் இயலாது. 2தீமோத்தேயு 3:16,17.

தேவன் தமது குமாரனைக் குறித்து சாட்சிக்கொடுத்து இயேசுகிறிஸ்துவை எல்லா நாமங்களுக்கும் மேலாக உயர்த்தி வைத்துள்ளார். தேவனால் உயர்த்தப்பட்ட இயேசுவை உலகத்தின் எந்த ஆதிக்க சக்திகளினாலும் கீழிறக்க இயலாது. உயர்த்தப்பட்ட இந்த இயேசுவை நோக்கிப் பார்க்கிறவன் இவ்வுலகத்தில் வாழுகிறான். மறு உலகத்தில் பிதாவின் இராஜ்யத்தில் சேர்க்கப்படுகிறான். எல்லா நாமங்களுக்கு மேலாக உயர்த்தப்பட்ட இயேசுவே நமது இரட்சிப்பாகவும் எதிர்கால வாழ்வின் நம்பிக்கையாகவும் இருக்கின்றார்.

இந்த சாட்சியங்களைக் கைக்கொள்ளுகிறவன் கிறிஸ்துவை உடையவனாக இருக்கிரான்.

என்னைக்குறித்து நானே சாட்சிகொடுத்தால் என் சாட்சி மெய்யாயிராது. என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவர் வேறொருவர் இருக்கிறார், அவர் என்னைக்குறித்துக் கொடுக்கிற சாட்சி மெய்யான சாட்சியென்று அறிந்திருக்கிறேன். நீங்கள் யோவானிடத்தில் ஆளனுப்பி விசாரித்தீர்கள், அவன் சத்தியத்திற்கு சாட்சிகொடுத்தான்.
நான் ஏற்றுக்கொள்ளுகிற சாட்சி மனுஷருடைய சாட்சியல்ல, நீங்கள் இரட்சிக்கப்படுவதற்காகவே இவைகளைச் சொல்லுகிறேன். அவன் எரிந்து பிரகாசிக்கிற விளக்காயிருந்தான்; நீங்களும் சிலகாலம் அவன் வெளிச்சத்திலே களிகூர மனதாயிருந்தீர்கள். யோவானுடைய சாட்சியைப்பார்க்கிலும் மேன்மையான சாட்சி எனக்கு உண்டு; அதென்னவெனில், நான் நிறைவேற்றும்படிக்குப் பிதாவானவர் எனக்குக் கற்பித்ததும் நான் செய்துவருகிறதுமான கிரியைகளே பிதா என்னை அனுப்பினார் என்று என்னைக்குறித்துச் சாட்சி கொடுக்கிறது. யோவான் 5:31-36…

ADD YOUR COMMENT

Powered By Indic IME