தேவனுடைய குமாரன் இல்லாதவன் ஜீவன் இல்லாதவன்.

He who has the Son has life; he who does not have the Son of God does not have life. (1John 5:12)

1John 2:23,24; John 1:12; John 3:36; John 5:24; 1Corinthians 1:30; Romans 8:9; Galathians 2:20; Hebrew 3:14; 2John 1:19; Revalation 20:15.

குமாரனை உடையவன் ஜீவனை உடையவன், தேவனுடைய குமாரன் இல்லாதவன் ஜீவன் இல்லாதவன். (1 யோவான் 5:12)

1யோவான் 2:23,24; யோவான் 1:12; யோவான் 3:36; யோவான் 5:24; 1கொரிந்தியர் 1:30; ரோமர் 8:9; கலாத்தியர் 2:20; எபிரேயர் 3:14; 2யோவான் 1:19; வெளி 20:15.

ஜீவன் இல்லாதவன்.

இரண்டு கூட்டத்தாரிடம் கிறிஸ்துவின் ஜீவன் இருப்பதில்லை. ஒன்று இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளாமலும், கிறிஸ்துவின் அடைக்கலத்துக்குள் வராமலும் உள்ளவர்கள். இவர்கள் தேவனையும் அறியவில்லை, கிறிஸ்துவையும் அறியவில்லை. தெய்வமல்லாதவைகளை தெய்வமென்று சொல்லிக்கொண்டும், தெய்வமேயில்லையென்று சொல்லிக்கொண்டும் வாழ்கிறவர்கள். தங்களை பெற்ற தகப்பன் உண்டென்று தெரிந்தவர்களுக்கு உண்மை தகப்பன் உண்டென்பதோ, எல்லாருக்கும் ஒரு தகப்பன் உண்டென்பதோ புத்திக்கு எட்டாமல் போயிற்று. உணர்வில்லாத அவர்களின் இருதயம் இருளடைந்துப்போய் இருளுக்குரியவர்கள் ஆகிவிட்டனர்.

இரண்டாவது, கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டவர் என்று சொல்லிக்கொண்டும் கிறிஸ்துவின் சரீரமாகிய சபைக்குள் இருந்துக்கொண்டும் கட்டளைகளுக்கு கீழ்படியாமலும், விசுவாசத்தின் அச்சாணியாகிய இயேசுவே ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று அறிந்திராமலும், நம்பாமலும், அறிக்கையிடாமலும் வாழ்கிறவர்கள். கர்த்தராகிய இயேசுவை தங்களுக்குள் கொண்டிராதபடிக்கு இவர்களின் இருதயம் மாம்சத்தின் ஆவியினாலும், உலகத்தின் ஆவியினாலும், ஐசுவரியத்தின் மயக்கத்தினாலும் நிறைந்துக் காணப்படுகிறது. விசுவாசத்தின் ஆவி இல்லாதவரிடத்தில் கிறிஸ்துவின் ஜீவன் குடிகொண்டிருப்பதில்லை. கிறிஸ்துவின் ஜீவன் இல்லாதவன் தேவனுடையவனல்ல. யூதாஸ் கிறிஸ்துவோடு இருந்திருந்தும் கிறிஸ்துவின் ஜீவன் இல்லாதவனாக வாழ்ந்ததினால் கிறிஸ்துவை விட்டு நிரந்தரமாக பிரிக்கப்பட்டுப்போனான்.

கர்த்தராகிய இயேசுவே ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று நம்பி ஏற்றுக்கொள்ளுகிறவர்கள் எப்படிப்பட்டவர்களாயிருந்தாலும் அவர்களுக்குள் கிறிஸ்துவின் ஜீவன் உண்டு. அவர்கள் தவறிழைப்பவர்களாயிருந்தாலும் அவைகளிலிருந்து விடுவிக்கப்படும் நேரம் கொடுக்கப்பட்டுள்ளது. பேதுரு இதற்கு உதாரணம். இயேசு கிறிஸ்துவின் ஜீவன் இல்லாமல் அவரின் இராஜ்யத்துக்குள் பிரவேசிக்க இயலாது.

மாம்சசிந்தை தேவனுக்கு விரோதமான பகை; அது தேவனுடைய நியாயப்பிரமாணத்துக்குக் கீழ்ப்படியாமலும், கீழ்ப்படியக்கூடாமலும் இருக்கிறது. மாம்சத்துக்குட்பட்டவர்கள் தேவனுக்குப் பிரியமாயிருக்கமாட்டார்கள்.
தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், நீங்கள் மாம்சத்துக்குட்பட்டவர்களாயிராமல் ஆவிக்குட்பட்டவர்களாயிருப்பீர்கள். கிறிஸ்துவின் ஆவியில்லாதவன் அவருடையவனல்ல. மேலும் கிறிஸ்து உங்களிலிருந்தால், சரீரமானது பாவத்தினிமித்தம் மரித்ததாயும், ஆவியானது நீதியினிமித்தம் ஜீவனுள்ளதாயும் இருக்கும். அன்றியும் இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பினவருடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பினவர் உங்களில் வாசமாயிருக்கிற தம்முடைய ஆவியினாலே சாவுக்கேதுவான உங்கள் சரீரங்களையும் உயிர்ப்பிப்பார். ரோமர் 8:7-11.

ADD YOUR COMMENT

Powered By Indic IME