இயேசுவை விசுவாசிக்கிறவர் இந்த சாட்சியை உடையவராயிருக்கிறார்.

He who believes in the Son of God has the witness in himself; he who does not believe God has made Him a liar. (1John 5:10)

Palms 25:14; Proverbs 3:32; Romans 8:16; Galathians 4:6; Colossians 3:3; 2Peter 1:19; Revalation 2:17,28; Numbers 23:19; Jobs 24:25; Isaiah 53:1; Jeremiah 15:18.

தேவனுடைய குமாரனிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் அந்தச் சாட்சியைத் தனக்குள்ளே கொண்டிருக்கிறான். தேவனை விசுவாசியாதவனோ, தேவன் தம்முடைய குமாரனைக்குறித்துக் கொடுத்த சாட்சியை விசுவாசியாததினால், அவரைப் பொய்யராக்குகிறான். (1 யோவான் 5:10)

சங்கீதம் 25:14; நீதிமொழிகள் 3:32; ரோமர் 8:16; கலாத்தியர் 4:6; கொலோசெயர் 3:3; 2பேதுரு 1:19; வெளி 2:17,28; எண்ணாகமம் 23:19; யோபு 24:25; ஏசாயா 53:1; எரேமியா 15:18.

நமக்குள் உள்ள இரகசியம்.

சுவிசேஷத்தின் மறைபொருளும் கிறிஸ்தவத்தின் அச்சாணியும் இயேசு ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்பதுவே. இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கிறேன் என்று சொல்லுகிற எவரும் இந்த சாட்சியை உடையவராயிருக்க வேண்டும். இந்த சாட்சியை உடையவர் எவரும் எவ்விதமான அறநெறிபாவங்களிலிருந்தும் மீண்டு வருவார்கள். ஏனெனில் இந்த விசுவாச அறிக்கை, விசுவாச சாட்சியானது பாவத்தினால் செத்துப்போன சரீரங்களையும் உயிர்ப்பிக்கும் ஆற்றல் உள்ளதாயிருக்கிறது. இந்த சாட்சியைக் கொண்டிருப்பவன் இயேசு கிறிஸ்துவை உயிருள்ளவராக இவ்வுலகத்தில் நிறுத்துகிறான். இன்னும் சொல்லப்போனால் அறிக்கையிடுகிற இவனே உயிருள்ள கிறிஸ்துவாக காட்சியளிக்கிறான். ஆனால் ஒரேயொரு பிரச்சனை என்னவெனில் அந்நிய தெய்வங்களோடு ஈடுபாடு கொள்கிறவர்களும், அந்நிய தெய்வங்களின் பெயர்களை – நாமங்களை கொண்டிருக்கிறவர்களும் இயேசுவை ஜீவனுள்ள தேவனுடைய குமாரன் என்று சொல்லிக்கொண்டே அவரை மறுபடியும் சிலுவையில் அறைய முயற்சிக்கின்றவர்களாக இருக்கின்றார்கள்.

விசுவாசத்தின் மூலமாய் இயேசு நமக்குள்ளே வாழ்கின்றார். அதாவது, இயேசுவே ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று அறிக்கையிடுவதே விசுவாசமாகும். இந்த விசுவாசம் உள்ளவனில் இயேசு கிறிஸ்து உயிருடன் வாழ்கின்றார். இதுவே உன்னத இரகசியமாகும். இவன் விழுந்தாலும் எழும்புவான். அதாவது, விழமாட்டான். அப்படியே விழுந்தாலும் எழும்புவான். ஏனெனில் உயிரோடெழுந்த இயேசு இவனுக்குள் இருப்பதினால் எழுப்பப்படுகின்றான். ஆனால் பாவத்தை செய்யும்போது இந்த இயேசு வெளியேற்றப்பட்டுவிட்டாரானால் அவனுக்குள் இயேசுவைப்போன்ற போலி இயேசு குடிபுகுந்து விடுவான். மற்றும் பாவத்திலே நிலைகொண்டிருப்பான். அவன் செய்வதெல்லாம் மாய்மாலத்தின் கிரியைகளாகவே காணப்படும்.

நமக்குள் உயிருடன் வாழும் இயேசுவினிமித்தம் நாம் குணத்திலும் , கிரியைகளிலும் மாற்றமடைகின்றோம். நமது இயல்பான சுபாவம் மாறிக்கொண்டிருப்பதை பிறர் அறிந்துக்கொள்வர். கோபம், எரிச்சல், சண்டை செய்தல், விவாதம் செய்தல், விட்டு கொடுக்காமை போன்றவைகள் யாவும் மாறுதலுக்குள்ளாகி சாந்தமுள்ள ஆவியுடையவர்களாய் மலர்ந்தெழுவார்கள். உள்ளே இரகசியம் இருக்குமானால் அது ஒரு நாள் பரசியமாக வெளிப்படும். மாம்பழம் உள்ளே பழுக்கிறது வரையிலும் வெளியிலே நிறம் மாற்றமடையாது. அது பழுக்கும்போது அதன் நிறம் மாறுவதை நாம் காண்கின்றோம். ஆனால் அதற்கு முன்பதாக அது உள்ளே பழுத்துள்ளதை அணில் போன்றவைகள் அறிந்துக் கொள்கின்றது. இதுதான் கிறிஸ்து உயிரோடு நமக்குள்ளே இருப்பதின் இரகசியமாகும். நம் குணமும் மாறியிருக்க வேண்டும். நம் நிறமும் மாறியிருக்க வேண்டும்.

ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச்சிருஷ்டியாயிருக்கிறான்; பழையவைகள் ஒழிந்துபோயின, எல்லாம் புதிதாயின. 2கொரிந்தியர் 5:17..

புறஜாதிகளுக்குள்ளே விளங்கிய இந்த இரகசியத்திலுள்ள மகிமையின் ஐசுவரியம் இன்னதென்று, தேவன் தம்முடைய பரிசுத்தவான்களுக்குத் தெரியப்படுத்தச் சித்தமானார்; கிறிஸ்துவானவர் மகிமையின் நம்பிக்கையாக உங்களுக்குள் இருப்பதே அந்த இரகசியம். எந்த மனுஷனையும் கிறிஸ்து இயேசுவுக்குள் தேறினவனாக நிறுத்தும்படிக்கு, அவரையே நாங்கள் அறிவித்து, எந்த மனுஷனுக்கும் புத்திசொல்லி, எந்த மனுஷனுக்கும் எல்லா ஞானத்தோடும் உபதேசம்பண்ணுகிறோம். அதற்காக நான் எனக்குள்ளே வல்லமையாய்க் கிரியை நடப்பிக்கிற அவருடைய பலத்தின்படி போராடிப் பிரயாசப்படுகிறேன். கொலோசேயர் 1:27-29..

விசுவாசமும் கிரியைகளில்லாதிருந்தால் தன்னிலேதானே செத்ததாயிருக்கும். யாக்கோபு 2:17..

ADD YOUR COMMENT

Powered By Indic IME