ஆவியானவர் சத்தியமாகையால், ஆவியானவரே சாட்சிகொடுக்கிறார்

ஆவியானவர் சத்தியமாகையால், ஆவியானவரே சாட்சிகொடுக்கிறார்

And it is the Spirit who bears witness, because the Spirit is truth. (1John 5:6)

John 14:17; John 15:26; John 16:13; 1Timothy 3:16; 1Timothy 4:1; Acts 5:32; Acts 15:8; Romans 8:16; Hebrew 10:15.

இயேசுகிறிஸ்துவாகிய இவரே ஜலத்தினாலும் இரத்தத்தினாலும் வந்தவர். ஜலத்தினாலே மாத்திரமல்ல, ஜலத்தினாலும் இரத்தத்தினாலும் வந்தவர். ஆவியானவர் சத்தியமாகையால், ஆவியானவரே சாட்சிகொடுக்கிறார். (1 யோவான் 5:6)

யோவான் 14:17; யோவான் 15:26; யோவான் 16:23; 1தீமோத்தேயு 3:16; 1தீமோத்தேயு 4:1; அப்போஸ்தலர் 5:32; அப்போஸ்தலர் 15:8; ரோமர் 8:16; எபிரெயர் 10:15.

ஆவியே சத்திய சாட்சி.

பரிசுத்த ஆவியானவர் வரங்களுக்குரியவர் மட்டுமல்ல, கிறிஸ்தவ வாழ்வுக்குமுரியவரும் கூட. வாழ்வின் கிரியைகளுக்குமுரியவர். கிரியைகளின் நற்கனிகளுக்குமுரியவர். நமது அன்றாட வாழ்வில் பிழையில்லாமலும், குற்றமில்லாமலும் உண்மையோடும் உத்தமத்தோடும் நேர்மையோடும் வாழ்வதற்கு பரிசுத்த ஆவி அவசியமாயுள்ளார். நாம் நமக்கு தரப்பட்டுள்ள அல்லது நம்மை நிலை நிறுத்தியுள்ள நற்காரியங்களில் எந்த அளவுக்கு உண்மையோடு நடந்துக்கொள்கிறோம் என்பதற்கு ஆவியானவர் சாட்சியமாயிருக்கிறார். அதுமட்டுமல்ல இயேசுவைக் குறித்து நமக்குள்ளும், நம்மைக்கொண்டு பிறருக்குள்ளும் சாட்சிக் கொடுக்கிறவர் ஆவியானவரே. அப்போஸ்தலர் நடபடிகளில் கிறிஸ்துவின் ஊழியர்களை கிறிஸ்துவை குறித்து சாட்சியங்களாக நிறுத்தினவர் பரிசுத்த ஆவியே. அவர்கள் என்ன பேசவேண்டும் என்பதை ஆவியானவரே தீர்மானித்தார். பெந்தெகோஸ்தே நாளில் தேவனுடைய மகத்துவங்களாகிய இரட்சண்ய கிரியைகளைக் குறித்து கூடிவந்தவர்களிடையில் அப்போஸ்தலர்களைக்கொண்டு சாட்சியமளித்தவர் ஆவியானவரே. நிருபங்களில் அப்போஸ்தலர்கள் பரிசுத்த ஆவியை சாட்சியமாக வைத்தே உபதேசித்தனர்.

நமது கிரியைகள், நமது உபதேசங்கள், நமது எழுத்துக்கள், நமது வாழ்க்கை ஆகிய யாவை குறித்தும் நமக்கு நாமே கொடுக்கும் சாட்சி அவசியமாயிருந்தாலும் சகலவற்றையும் அறிகிறவரும் , ஆழங்களை அறிகிறவரும், சத்தியத்தின் சாட்சியமுமாயிருக்கிற பரியசுத்த ஆவியானவர் கொடுக்கிற சாட்சியே உன்னதமமானது. நம்மைக்குறித்து நாமும் பிறரும் சாட்சிக்கொடுத்தாலும் தேவனிடம் நம்மைக்குறித்து சாட்சிக்கொடுக்கிறவர் பரிசுத்த ஆவியே. நமது உள்ளங்களை அறிந்திருப்பதினால் நமது பேச்சுக்கும் சிந்தனைக்கும் நமது உபதேசங்களுக்கும் கிரியைகளுக்கும் இடையில் உள்ள ஒற்றுமை வேற்றுமை குறித்து அவரே சாட்சிக் கொடுக்கிறார். ஆகையினால் நாம் தவறும்போது நாம் பெற்றுள்ள ஆவியானவரே நமக்கு எதிராக இருக்கிறார் என்பதை அறிந்திடுக.

நாம் தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோமென்று ஆவியானவர்தாமே நம்முடைய ஆவியுடனேகூடச் சாட்சிகொடுக்கிறார். ரோமர் 8:16..

நான் சொல்லுகிறது பொய்யல்ல, கிறிஸ்துவுக்குள் உண்மையைச் சொல்லுகிறேன் என்Ѡρ பரிசுத்த ஆவிக்குள் என் மனச்சாட்சியும் எனக்குச் சாட்சியாயிருக்கிறது. ரோமர் 9:12..

இருதயங்களை அறிந்திருக்கிற தேவன் நமக்குப் பரிசுத்த ஆவியைத் தந்தருளினதுபோல அவர்களுக்கும் தந்தருளி, அவர்களைக் குறித்துச் சாட்சிகொடுத்தார்; அப்போஸ்தலர் 15:8..

ADD YOUR COMMENT

Powered By Indic IME