குருவும் குதிரைக் காரரும்

குருவும் குதிரைக் காரரும்

ஊர்ல பெரிய குரு இருந்தார்.

முற்றும் துறந்தவர்.

எல்லாம் கற்றவர்.

அவரை ஒரு பிரசங்கம் செய்ய கூப்பிட்டிருந்தாங்க.

பத்தாயிரம் பேர் வருவாங்கனு சொல்லியிருந்தாங்க.

அவரை அழைச்சிட்டு வர ஒரு குதிரைக் காரர் போயிருந்தார்.

அன்றைக்குக்கு பார்த்து ஊரில் பயங்கர மழை.

கூட்டம் கேன்சலாகி எல்லோரும் கலைஞ்சு போயிட்டாங்க.

குரு வந்தபோது அங்கே யாருமே இல்லை.

பேசறதுக்காக நிறையத் தயார் பண்ணிட்டு வந்த குருவுக்கோ ஏமாற்றம்.

இருக்கிற ஒரு குதிரைக்காரனுக்காக மட்டும் பிரசங்கம் பண்ணவும் மனசில்லை.

என்னப்பா பண்ண லாம்?’ னு கேட்டார்.

அய்யா! நான் குதிரைக் காரன்

எனக்கு ஒண்ணும் தெரியாதுங்க

ஆனா ஒண்ணே ஒண்ணு தெரியுங்க.

நான் முப்பது குதிரை வளர்க்கிறேன்.

புல்லு வைக்கப் போறப்போ எல்லாக் குதிரையும் வெளியே போயி, அங்கே ஒரே ஒரு குதிரை மட்டும்தான் இருக்குதுனு வெச்சுக்கோங்க

நான் அந்த ஒரு குதிரைக்குத் தேவையான புல்லை வெச்சிட்டுத்தாங்க திரும்புவேன்’ னான்.

பொளேர்னு அறைஞ்ச மாதிரி இருந்தது குருவுக்கு.

அந்தக் குதிரைக்காரனுக்கு ஒரு ‘சபாஷ்’ போட்டுட்டு,
அவனுக்கு மட்டும் தன் பிரசங்கத்தை ஆரம்பிச்சார்.

தத்துவம்,

மந்திரம்,

பாவம்,

புண்ணியம்,

சொர்க்கம்,

நரகம்னு

சரமாரியா போட்டுத் தாக்கி பிரமாதப் படுத்திட்டார் குரு.

பிரசங்கம் முடிஞ்சுது.

எப்படிப்பா இருந்தது என் பேச்சு?’னு அவனைப் பார்த்து பெருமையா கேட்டார் குரு.

அய்யா… நான் குதிரைக்காரன்.
எனக்கு ஒண்ணும் தெரியாதுங்க.
ஆனா ஒண்ணே ஒண்ணு தெரியுங்க…

நான் புல்லு வைக்கப் போற இடத்தில் ஒரு குதிரைதான் இருந்துச்சுன்னா, நான் அதுக்கு மட்டும்தான் புல்லு வெப்பேன்.

முப்பது குதிரைக்கான புல்லையும் அந்த ஒரு குதிரைக்கே கொட்டிட்டு வர மாட்டேன்!’னான்

அவ்ளோதான்
குரு தெறிச்சிட்டார்!

நீதி:
மத்தவங்களுக்கு என்ன தேவையோ, அல்லது எது சொன்னா புரியுமோ அதை மட்டும் சொல்லனும் .

புரியாத,
தேவையில்லாத விஷயங்களை மெனக்கெட்டு சொல்றது நாம் யார் என்பதை காண்பித்துவிடும்..

ADD YOUR COMMENT

Powered By Indic IME