துவக்கமும் முடிவும்

End and beginning.

Genesis 2:2,3; Genesis 6:13; Job 6:11; Job 16:22; Psalms 37:37,38; Psalms 39:4; Proverbs 23:18; Ecc 7:2,8; Hebrews 2:1; Hebrews 13:7.

ஆதியாகமம் 2:2,3; ஆதியாகமம் 6:13; யோபு 6:11; யோபு 16:22; சங்கீதம் 37:37,38; சங்கீதம் 39:4; நீதிமொழிகள் 23:18; பிரசங்கி 7:2,8; எபிரெயர் 2:1; எபிரெயர் 13:7.

முடிவு: புது துவக்கத்திற்க்கான அடையாளம்.
1பேதுரு 4:17 ல் எல்லாவற்றிற்கும் முடிவு சமீபமாயிற்று என்பதுபோல, துவங்கப்படும் எந்த ஒரு செயலுக்கும் முடிவுரை எழுதப்பட்டாயிற்று. முடிவுரையினூடாக நாம் கடந்து போகும்போது இழப்பின் உணர்வும் வலியின் ருசியும் அன்றாடம் நாம் அனுபவித்து கொண்டிருப்பதாகும்.

வருஷத்துக்கு முடிவைக் கொண்டு வந்தவர் ஒரு வருஷத்துக்கான துவக்கத்தையும் கொண்டுவருகிறார். இருண்ட காலத்துக்கும் முடிவு உண்டாக்கி ஒளியுகம் கொண்டுவருகிறார். தீமைக்கு முடிவு உண்டாக்கி நன்மையைப் பெருகசெய்கிறார். சாத்தானின் ராஜ்யத்துக்கு முடிவுண்டாக்கி ஒளியின் இராஜ்யத்தை எழும்ப பண்ணுகிறார். துன்மார்க்கனுக்கு முடிவு உண்டாகி நீதிமானை  எழும்ப வைக்கிறார். அந்நிய தெய்வங்களுக்கு முடிவு உண்டாக்கி சுத்திகரிப்பைக் கொண்டுவருகிறார். பாவத்துக்கு முடிவு உண்டாக்கி பரிசுத்த ஜாதியை தோற்றுவிக்கிறார். எல்லாவற்றிற்கும் முடிவு உண்டு ஆனால் முடிவு முடிவோடு முடிந்து போகாதபடிக்கு புது துவக்கத்துக்கு வழிவிட வேண்டும்.

நாம் காண்கின்ற யாவும் முடிவு பெறும். நாம் அனுபவிக்கின்ற யாவுக்கும் முடிவு உண்டாகும். நமது அழகு, நமது படிப்பு, நமது சம்பாத்தியம், நமது புகழ், நமது பதவிகள், நமது செல்வாக்குகள், நமது பணம், நமது ஆரோக்கியம் எல்லாம் முடிவு பெறும் வேளை நெருங்கிவிட்டது. முடிவு நாளிலாவது முடிவை குறித்து சிந்திக்காமல் இருப்பது ஆபத்தானது. விருந்துவீட்டை விடவும் துக்க வீடு சிறப்பானது என்பது ஞானம். ஏன்? அங்கு தான் ஒவ்வொருவரின் முடிவும் நினைவு கூரப்படுகின்றது. முடிவு ஆரம்பமாகின்றது. முடிவு என்னை நெருங்காது என்போர்களையும் முடிவு விட்டுவிடுவதில்லை. முடிவு நம்மை நாம் எங்கு போனாலும் துரத்திக் கொண்டே இருக்கின்றது. சிந்திப்போம்.

பாவமாகிய கீழ்ப்படியாமை முடிவை கொண்டு வந்தது. அந்த கீழ்ப்படியாமையை அழித்து முடிக்கும் வரைக்கும் முடிவு தொடர்ந்து கொண்டே இருக்கும். கீழ்ப்படியாமை செல்லுகிறவர்களுக்கும் கீழ்ப்படிதலுக்குள் இருக்கிறவர்களுக்கும் ஒன்றுபோலவே முடிவு உண்டாகும். ஆனால் கீழ்ப்படியாமையின் முடிவானது நரகத்துக்கு துவக்கத்தை கொடுக்கிறது. கீழ்ப்படிதலின் முடிவானது பரலோகத்துக்கு – புதிய பூமிக்கு துவக்கத்தை கொடுக்கிறது.
முடிவில்லாத காலம் வருவது வரையிலும் முடிவு வந்து கொண்டே இருக்கும். எத்தகைய முடிவு வந்தாலும் நமது துவக்கம் கிறிஸ்துவுக்குள் தொடருமானால் அது ஆசீர்வாதமாகவே இருக்கும். 
வருட முடிவு புது வருடத்திற்கான அறைகூவல்.

ADD YOUR COMMENT

Powered By Indic IME