பேதுரு திரும்பிப்பார்த்து சீஷன் பின்வருவதைக் கண்டார்.
Peter,seeing him,said to Jesus,But Lord,what about this man? (John 21:20)
John 21:7,24; John 20:2; John 13:23-26; 1 Samuel 24:8; 1 Chronicles 21:20; Luke 9:53; Luke 14:25; Genesis 19:17,26; Jeremiah 7:24; Luke 17:21.
பேதுரு திரும்பிப்பார்த்து, இயேசுவுக்கு அன்பாயிருந்தவனும், இராப்போஜனம்பண்ணுகையில் அவர் மார்பிலே சாய்ந்து: ஆண்டவரே, உம்மைக் காட்டிக் கொடுக்கிறவன் யார் என்று கேட்டவனுமாகிய சீஷன் பின்னே வருகிறதைக் கண்டான். (யோவான் 21:20)
யோவான் 21:7,24; யோவான் 20:2; யோவான் 13:23-26; 1சாமுவேல் 24:8; 1நாளாகமம் 21:20; லூக்கா 9:53; லூக்கா 14:25; ஆதியாகமம் 19:17,26; எரேமியா 7:24; லூக்கா 17:21.
திரும்பி பார்த்த பேதுரு.
பேதுருவைப் பார்த்து ஆண்டவர் பேசுகிறார். பேதுருவை திரும்பவும் கட்டி எழுப்புகிறார். தன்னைக் குறித்து ஆண்டவர் கூறிய கூற்றை நிதானித்தறிந்து தன்னை தாயார்படுத்திக்கொள்ள முயற்சிக்காது தனக்கு பின்னால் வந்து கொண்டிருக்கின்ற இயேசுவுக்கு அன்பான சீஷனை குறித்து அவனது காரியம் என்னவென்று கேட்கின்றார். என்னைக் குறித்து சொல்லிவிட்டீர்கள். அவனைக் குறித்தும் அறிய விரும்புகிறேன் என்று பேதுரு கூறுகின்றார். இந்த பேதுருவைபோல நம்மில் அனேகரும் என் சகோதரனை குறித்து என்ன, என் அடுத்த வீட்டுக்காரர்களைக் குறித்து என்ன, அந்த சபையைக் குறித்து என்ன, அந்த ஊழியக்காரனைக் குறித்து என்ன என்று இவ்வாறு ஆண்டவரிடம் விசாரிக்கிறவர்களாயிருக்கிறோம். இது தவறா இல்லையா என்பதை பின்னர் நாம் அறியலாம். இத்தியாதி மனநிலையைக் குறித்து அறிவது எத்தகைய தன்மைகளை வெளிப்படுத்தும் என்று நாம் இன்று அறிவோமாக.
திரும்பிபார்த்தல் விபரீதமான விளைவுகளை உண்டாக்கும் என்பதை விவிலியத்தின் பல சம்பவங்களினால் அறிய முடிகின்றது. திரும்பி பார்த்த லோத்தின் மனைவி உப்புத்தூணாகிப்போனாள்.
திரும்பிப்பார்த்தல் பின்னிட்டு திரும்புவதையும், பின்மாற்றத்திற்கு செல்வதையும் உண்டாக்கும். அநேகர் தேவனை நோக்கி முன்னேறுவதற்கு பதில் உலகத்தையும், உலகத்தில் உள்ளவைகளின் மீதுஆசை பற்றுவைத்தும் பின்னிட்டு திரும்புகிறார்கள். அவரை விட்டு விலகுகிறார்கள்.
திரும்பிபார்த்தல் தேவனுக்கு புறமுதுகு காட்டுவதாக அமைகிறது. தேவனின் குரலை கேட்டும், அவரை தரிசித்தும், அவரின் ஆலோசனகளைப் பெற்றும் பிறர் மீது நாட்டம் கொள்வதினால் தேவனுக்கு புறமுதுகு காட்டுகிறவர்களாயிருக்கிறோம். மனிதநலம் முக்கியமானதே. ஆனால் தேவனிடமிருந்து சமிக்ஞை கிடைக்காமல் செய்யும் எந்த காரியமும் அவரை பின்னுக்கு தள்ளும் செயலாகும்.
நம் பின்னாலிருந்து அவர் நம்மை அழைப்பதினாலோ, தூண்டுவதினாலோ மட்டுமே நாம் பின்னிட்டு பார்க்க அனுமதிக்கப்பட்டுள்ளோம். உலகத்தின் மீதும், அதன் காரியங்கள் மீதும் நாட்டம் கொள்கிறவர்களின் பின்னாலிருந்து அழைப்பவராகவே இருக்கிறார். கவனத்தை தன்பக்கம் ஈர்க்க இவ்விதம் செய்கிறார். அனேக தரிசனங்களில் இத்தகைய காரியங்கள் வெளிப்பட்டுள்ளன.
பேதுருவைபோல அவரை பின்பற்றிச் செல்லும்படி அழைப்பு பெற்ற தேவனுடைய மனிதர்கள் எந்த சூழ்நிலையிலும் தேவன் தன்மேல் கொண்டுள்ள கவனத்தை திசை திருப்ப முயற்சிக்கலாகாது. அவர் தன்னில் என்ன விரும்பினாரோ அதையே செய்ய நாம் கவனமாய் இருக்க வேண்டும். அவரை பின்பற்றிவர அழைப்பு விடுத்தால் அவரை நாம் பின்பற்றி செல்வதிலேயே கவனம் செலுத்த வேண்டும். எப்படி அவரை பின்பற்றுவது என்றும்? எங்கே அவரை பின்பற்றுவது என்றும், எதற்காக அவரை பின்பற்றுவது என்றும் அறிய முயற்சிக்க வேண்டுமேயன்றி உலகத்தையும், மற்றோரையும் குறித்து அறிய முயற்சித்து நற்பொருளை இழக்காமலிருப்போமாக.
அவர் அழைத்தழைப்பிலே உறுதியாய் நிற்போமாக. விசுவாசியாக இருக்க அழைக்கப்பட்டால் விசுவாசிகளாயிருப்போம். ஊழியத்துக்காய் அழைப்பு பெற்றால் அதிலே நிலை கொண்டிருப்போம்.
தேவனுடைய கிருபைவரங்களும், அவர்களை அழைத்த அழைப்பும் மாறாதவைகளே. ரோமர் 11:29.
தம்முடைய குமாரனும் நம்முடைய கர்த்தருமாயிருக்கிற இயேசுகிறிஸ்துவுடனே ஐக்கியமாயிருப்பதற்கு உங்களை அழைத்த தேவன் உண்மையுள்ளவர். 20 அவனவன் தான் அழைக்கப்பட்ட நிலைமையிலே நிலைத்திருக்கக்கடவன். அடிமையாய் நீ அழைக்கப்பட்டிருந்தால், கவலைப்படாதே; நீ சுயாதீனனாகக்கூடுமானால் அதை நலமென்று அநுசரித்துக்கொள். கர்த்தருக்குள் அழைக்கப்பட்ட அடிமையானவன் கர்த்தருடைய சுயாதீனனாயிருக்கிறான்; அப்படியே அழைக்கப்பட்ட சுயாதீனன் கிறிஸ்துவினுடைய அடிமையாயிருக்கிறான். நீங்கள் கிரயத்துக்குக் கொள்ளப்பட்டீர்கள்; மனுஷருக்கு அடிமைகளாகாதிருங்கள். சகோதரரே, அவனவன் தான் அழைக்கப்பட்ட நிலைமையிலே தேவனுக்கு முன்பாக நிலைத்திருக்கக்கடவன். 1கொரிந்தியர் 1:9. 7:20-24.
ஆதலால், கர்த்தர்நிமித்தம் கட்டுண்டவனாகிய நான் உங்களுக்குச் சொல்லுகிற புத்தியென்னவெனில், நீங்கள் அழைக்கப்பட்ட அழைப்புக்குப் பாத்திரவான்களாய் நடந்து, மிகுந்த மனத்தாழ்மையும் சாந்தமும் நீடிய பொறுமையும் உடையவர்களாய், அன்பினால் ஒருவரையொருவர் தாங்கி, சமாதானக்கட்டினால் ஆவியின் ஒருமையைக் காத்துக்கொள்வதற்கு ஜாக்கிரதையாயிருங்கள். உங்களுக்கு உண்டான அழைப்பினாலே நீங்கள் ஒரே நம்பிக்கைக்கு அழைக்கப்பட்டதுபோல, ஒரே சரீரமும் ஒரே ஆவியும் உண்டு; ஒரே கர்த்தரும், ஒரே விசுவாசமும், ஒரே ஞானஸ்நானமும், எல்லாருக்கும் ஒரே தேவனும் பிதாவும் உண்டு; அவர் எல்லார்மேலும், எல்லாரோடும், உங்கள் எல்லாருக்குள்ளும் இருக்கிறவர். எபேசியர் 4:1-6.
கிறிஸ்து இயேசுவுக்குள் நம்மைத் தமது நித்திய மகிமைக்கு அழைத்தவராயிருக்கிற சகல கிருபையும் பொருந்திய தேவன்தாமே கொஞ்சக்காலம் பாடநுபவிக்கிற உங்களைச் சீர்ப்படுத்தி, ஸ்திரப்படுத்தி, பலப்படுத்தி, நிலைநிறுத்துவாராக. 1பேதுரு 5:10.