இயேசு: என் ஆட்டுக்குட்டிகளை மேய்ப்பாயாக

இயேசு: என் ஆட்டுக்குட்டிகளை மேய்ப்பாயாக

Jesus said to Peter,Feed My lambs. (John 21:15)

Genesis 33:13; Isaiah 40:11; Matthew 18:10,11; Luke 22:32; Romans 14:1; Romans 15:1; 1Corinthians 3:1-3; 1Corinthians 8:11; Ephesians 4:14; Hebrews 12:12,13; 1Peter 2:2.

அவர்கள் போஜனம்பண்ணினபின்பு, இயேசு சீமோன்பேதுருவை நோக்கி: யோனாவின் குமாரனாகிய சீமோனே, இவர்களிலும் அதிகமாய் நீ என்னிடத்தில் அன்பாயிருக்கிறாயா என்றார். அதற்கு அவன்: ஆம் ஆண்டவரே, உம்மை நேசிக்கிறேன் என்பதை நீர் அறிவீர் என்றான். அவர்: என் ஆட்டுக்குட்டிகளை மேய்ப்பாயாக என்றார். (யோவான் 21:15)

ஆதியாகமம் 33:13; ஏசாயா 40:11; மத்தேயு 18:10,11; லூக்கா 22:32; ரோமர் 14:1; ரோமர் 15:1; 1கொரிந்தியர் 3:1-3; 1கொரிந்தியர் 8:11; எபேசியர் 4:14; எபிரெயர் 12:12,13; 1பேதுரு 2:2.

மேய்க்கும் பேதுரு:
கர்த்தராகிய இயேசு கிறிஸ்து என் ஆட்டுகுட்டிகளை மேய்ப்பாயாக என்று பேதுருவிடம் கூறுகின்றார். பொதுவாக தேவனை பிரதான மேய்ப்பராகவும், இஸ்ராயேலரை மந்தைகளாகவும் கருதி தீர்க்கதரிசிகளும், ஆசாரியர்களும், ராஜாக்களும் பலவிதமான உபதேசங்களை மொழிந்துள்ளார்கள் என்பதை விவிலியத்தில் நாம் வாசிக்கின்றோம். இயேசு கிறிஸ்துவும் இதே வழியை பின்பற்றி தன்னை பிரதான மேய்ப்பராகவும், பேதுருவை மேய்ப்பர்களுக்கு பொறுப்பாளராகவும், விசுவாசிகளை – சீஷர்களை ஆ ட்டுகுட்டிகளாகவும் பாவித்து கட்டளையிடுகின்றார். அந்தந்த சபை பிரிவினர் தங்கள் தங்களுக்கென்று உபதேசங்களை பலவாறாக கொண்டிருந்தாலும் இயேசு கிறிஸ்துவின் உள்ள கிடக்கையை நாம் ஒதுக்கி தள்ள முடியாது. 
ஒரு தவறிழைத்தவனை தலைவனாக – மேய்ப்பனாக நிறுத்தும்போதுதான் பேதுருவைப்போல பின்வாங்கிப்போகிறவர்களை தாங்கிபிடிக்கும் அனுபவத்தை வெளிப்படுத்த முடியும்.

உடைக்கப்பட்ட இடத்தில்தான் உருவாக்கப்படுதல் நடக்கிறது. வீழ்ந்தவனையும், வீழ்த்தபட்டவனையும் மீட்டெடுத்து ஆரோக்கியமுள்ள தலைவர்களாக நிறுத்துவது அவரின் விருப்பம். 

பேதுரு சீஷர்களுக்கு தலைவனாக நியமிக்கப்பட்டதில் தடுமாற்றம் இல்லை. அது அவரின் விருப்பம். சபைகள் தலைவன் இல்லாது சிதறி போனவர்களால் காணப்படாதபடிக்கு தலைவர்கள் பொறுப்பாளர்களை நியமிக்கின்றனர். ஒவ்வொரு ஸ்தாபனங்களின் தலைமைத்துவ பொறுப்பாளர்களும் தாங்கள் வாழும்போதே அடுத்த தலைமைத்துவத்தை உருவாக்குவது நல்லது.

பேதுரு விருத்த சேதனமுள்ளவர்களுக்கு அப்போஸ்தலனாகவும், பவுல் புறஜாதி சபைகளுக்கு அப்போஸ்தலனாகவும் ஏற்படுத்தபட்டிருந்தாலும் கூட்டு தலைமையைவிடவும் தனி தலைமைத்துவத்தை இயேசு கிறிஸ்து ஏற்படுத்தியதை ஏற்றுக்கொண்டுதானாக வேண்டும். அதன்படி பேதுருவே அவரின் காலத்தில் தலைமையை அலங்கரித்தார். 

தலைமைத்துவம் ஜாதி, மொழி, நிறம், இனம் அடிப்படையில் அமைவதல்ல, தேவனுடைய அநாதி தீர்மானத்தின்படி ஏற்படுத்தபடுவதாகும். விருப்பு வெறுப்புகளுக்கு இங்கு இடமில்லை. பார்வையின்படியோ, திறமைகளின்படியோ, சீனியாரிட்டி படியோ தேவன் தீர்மானிப்பதில்லை. பிற்காலங்களில் அவர்கள் எப்படி நடந்துக்கொள்வார்கள் என்பதை பொறுத்தே தேவன் தீர்மானிக்கின்றார். பேதுருவின் இறுதிகாலத்தில் கிறிஸ்துவுக்கு தன்னை சமமாக்காதபடிக்கு தலைகீழாக சிலுவையில் அறையப்பட ஒப்புக்கொடுத்து சிறந்த மாதிரியை வெளிபடுத்தினார். 

அந்நாட்களிலே, சீஷர்களில் ஏறக்குறைய நூற்றிருபதுபேர் கூடியிருந்தபோது, அவர்கள் நடுவிலே பேதுரு எழுந்து நின்று,அப்பொழுது பேதுரு பதினொருவரோடுங்கூட நின்று, அவர்களை நோக்கி: உரத்த சத்தமாய்: யூதர்களே, எருசலேமில் வாசம்பண்ணுகிற ஜனங்களே, நீங்களெல்லாரும் அறிந்துகொள்வீர்களாக, என் வார்த்தைகளுக்குச் செவிகொடுங்கள். குணமாக்கப்பட்ட சப்பாணி பேதுருவையும் யோவானையும் பற்றிக்கொண்டிருக்கையில், ஜனங்களெல்லாரும் பிரமித்து, சாலொமோன் மண்டபம் என்னப்பட்ட மண்டபத்திலே அவர்களிடத்திற்கு ஓடிவந்தார்கள். பேதுரு அதைக் கண்டு ஜனங்களை நோக்கி: இஸ்ரவேலரே, இதைக்குறித்து நீங்கள் ஆச்சரியப்படுகிறதென்ன? நாங்கள் எங்கள் சுயசக்தியினாலாவது, எங்கள் சுயபக்தியினாலாவது, இவனை நடக்கப்பண்ணினோமென்று நீங்கள் எங்களை நோக்கிப் பார்க்கிறதென்ன? 


அப்பொழுது பேதுரு பரிசுத்த ஆவியிலே நிறைந்து, அவர்களை நோக்கி: ஜனத்தின் அதிகாரிகளே, இஸ்ரவேலின் மூப்பர்களே, பிணியாளியாயிருந்த இந்த மனுஷனுக்குச் செய்யப்பட்ட உபகாரத்தைக்குறித்து எதினாலே இவன் ஆரோக்கியமானானென்று நீங்கள் இன்று எங்களிடத்தில் விசாரித்துக்கேட்டால், உங்களால் சிலுவையில் அறையப்பட்டவரும், தேவனால் மரித்தோரிலிருந்து எழுப்பப்பட்டவருமாயிருக்கிற நசரேனாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலேயே இவன் உங்களுக்கு முன்பாகச் சொஸ்தமாய் நிற்கிறானானென்று உங்களுக்கும், இஸ்ரவேல் ஜனங்களெல்லாருக்கும் தெரிந்திருக்கக்கடவது. வீடு கட்டுகிறவர்களாகிய உங்களால் அற்பமாய் எண்ணப்பட்ட அவரே மூலைக்குத் தலைக்கல்லானவர். அவராலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை; நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை என்றான்.

பேதுருவும் யோவானும் பேசுகிற தைரியத்தை அவர்கள் கண்டு, அவர்கள் படிப்பறியாதவர்களென்றும் பேதமையுள்ளவர்களென்றும் அறிந்தபடியினால் ஆச்சரியப்பட்டு, அவர்கள் இயேசுவுடனேகூட இருந்தவர்களென்றும் அறிந்துகொண்டார்கள். அப்போஸ்தலர் 1:15; அப்போஸ்தலர் 2:14; அப்போஸ்தலர் 3:11,12; அப்போஸ்தலர் 4:8-13.

ADD YOUR COMMENT

Powered By Indic IME