அன்புள்ளவர்களாயிருந்தால், நீங்கள் என் சீஷர்களாயிருப்பீர்கள் என்று அறிவர்
By this all will know that you are My disciples, if you have love for one another. (John 13:35)
John 17:21; Acts 4:32-35; Acts 5:12-14; 1Corinthians1:10; 1corinthians16:14; 1 Thessalonians4:9; 1 Thessalonians5:13; 1John 2:5,10; 1John 3:10-14; 1John 4:20,21.
நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்துகொள்வார்கள் என்றார். (யோவான் 13:35)
யோவான் 17:21; அப்போஸ்தலர் 4:32-35; அப்போஸ்தலர் 5:12-14; 1கொரிந்தியர் 1:10; 1கொரிந்தியர் 16:14; 1தெசலோனிக்கேயர் 4:9; 1தெசலோனிக்கேயர் 5:13; 1யோவான் 2:5,10; 1யோவான் 3:10-14; 1யோவான் 4:20,21.
சீஷர்கள் என்று அறிவர்:
கர்த்தராகிய இயேசு தமது சீஷர்கள் ஒன்றாயிருக்க வேண்டும் என்ற மனவிருப்பமுடையவராயிருந்தார். இதற்காக அவர் பயன்படுத்திய இன்னொரு சொல் நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம் என்பதாகும். நானும் பிதாவும் ஒன்றாயிருந்து இவ்வளவு பெரிய இரட்சிப்பை கொண்டு வந்தது போல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருந்து ஒன்றித்து இந்த இரட்சிப்பை உலகிற்கு கொண்டு வர வேண்டும் என்பதாகும்.
நானும் பிதாவும் ஒன்றாயிருந்த போதிலும் உபத்திரவங்களும் பாடுகளும் மிகுதியாய் அனுபவிக்கவேண்டியிருந்தது. என்றாலும் அவைகள் எல்லாவற்றிலும் தந்தையாம் தேவன் கூட இருந்தார். அதுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருந்தால் பிதாவாகிய தேவன் உங்களை உங்கள் பாடுகளிலும் உபத்திரவங்களிலும் காத்துக் கொள்வார் என்பதாகும்.
சீஷர்களின் ஒருமித்த, ஒருங்கிணைந்த அன்பே அவர்களை கிறிஸ்துவின் சீஷர்களாக காண்பிக்கின்றது. காட்டிகொடுக்கிறவனும், மறுதலிக்கிறவனும், அவிசுவாசமுள்ளவனும், ஓடிபோகிறவர்களுமாயிருந்தாலும் ஒருவரிலொருவர் அன்பாயிருந்து கிறிஸ்துவின் சீஷர்கள் என்பதை நிரூபிக்க வேண்டும்.
அன்பினால் உண்டான இரட்சிப்பு. இந்த மீட்பை கசப்புகளோடும், வெறுப்புகளோடும், பிரிவினையின் ஆவிகளோடும், இருளின் அதிகாரத்துக்குள்ளும், மரண வாசனைக்குள்ளும், பாவ அழுக்குகளுக்குள்ளும் கொண்டு போக முடியாது. நம்மில் உண்டாகும் அன்பே நம்மை அவருடையவராக்குகிறது. நம்மிலும் பிறரிலும் உருவாகும் அன்பே நம்மை ஒருங்கிணைக்கின்றது.
பிரியமானவர்களே, ஒருவரிலொருவர் அன்பாயிருக்கக்கடவோம்; ஏனெனில் அன்பு தேவனால் உண்டாயிருக்கிறது; அன்புள்ள எவனும் தேவனால் பிறந்து, அவரை அறிந்திருக்கிறான். அன்பில்லாதவன் தேவனை அறியான், தேவன் அன்பாகவே இருக்கிறார். தம்முடைய ஒரே பேறான குமாரனாலே நாம் பிழைக்கும்படிக்கு தேவன் அவரை இவ்வுலகத்திலே அனுப்பினதினால் தேவன் நம்மேல் வைத்த அன்பு வெளிப்பட்டது. நாம் தேவனிடத்தில் அன்புகூர்ந்ததினால் அல்ல, அவர் நம்மிடத்தில் அன்புகூர்ந்து, நம்முடைய பாவங்களை நிவிர்த்திசெய்கிற கிருபாதாரபலியாகத் தம்முடைய குமாரனை அனுப்பினதினாலே அன்பு உண்டாயிருக்கிறது. பிரியமானவர்களே, தேவன் இவ்விதமாய் நம்மிடத்தில் அன்புகூர்ந்திருக்க, நாமும் ஒருவரிடத்தில் ஒருவர் அன்புகூரக் கடனாளிகளாயிருக்கிறோம். தேவனை ஒருவரும் ஒருபோதும் கண்டதில்லை; நாம் ஒருவரிடத்தில் ஒருவர் அன்புகூர்ந்தால் தேவன் நமக்குள் நிலைத்திருக்கிறார்; அவருடைய அன்பும் நமக்குள் பூரணப்படும். 1யோவான்4:7-12.
Great post.