நாமும் ஒருவரிடத்தில் ஒருவர் அன்புகூரக் கடனாளிகளாயிருக்கிறோம்

நாமும் ஒருவரிடத்தில் ஒருவர் அன்புகூரக் கடனாளிகளாயிருக்கிறோம்.

Beloved, if God so loved us, we also ought to love one another. (1John 4:11)

1John 3:16,17,23; Matthew 18:32,33; Luke 10:37; John 13:34; John 15:12,13; Ephesians 4:31,32; Ephesians 5:1,2; Colossians 3:13.

பிரியமானவர்களே, தேவன் இவ்விதமாய் நம்மிடத்தில் அன்புகூர்ந்திருக்க, நாமும் ஒருவரிடத்தில் ஒருவர் அன்புகூரக் கடனாளிகளாயிருக்கிறோம். (1 யோவான் 4:11)

1யோவான் 3:16,17,23; மத்தேயு 18:32,33; லூக்கா 10:37; யோவான் 13:34; யோவான் 15:12,13; எபேசியர் 4:31,32; எபேசியர் 5:1,2; கொலோசெயர் 3:13.

நாம் கடனாளிகள்.

தேவன் நம்மில் அன்புகூர்ந்ததினால் நாமும் ஒருவரிலொருவர் அன்புகூர கடனாளியாயிருக்கிறோம். தேவன் நம்மில் அன்புகூர்ந்த முறைமை மூன்று விதமானது. ஒன்று தமது ஜீவனை ஜீவசுவாசமாக மனிதர்க்கு கொடுத்து மனுஷனை ஜீவாத்துமாவாக்கினது. 2 வது தேவன் தமது ஒரேபேறான குமாரனை மனிதனின் மீட்புக்கான பலியாக ஒப்புக்கொடுத்தது. 3 வது கிறிஸ்துவால் மீட்கபட்டவர்களை தமது பிள்ளைகளாக ஏற்றுக்கொண்டு சிலரை ஊழியர்களாகவும், பலரை விசுவாசிகளாகவும் நியமித்துக்கொண்டது.

அன்பு தாமாக முன்வந்து செய்வதாகும். ஒருவரின் விருப்பத்தின் பேரில் செய்வதல்ல, முற்றிலுமாய் தன்னிஷ்டபடி செய்வதாகும். ஒருவர் கேட்பதினிமித்தம் ஒன்றைக் கொடுப்பது அன்பாகாது. அது ஈகையாகும். தகுதியற்றவன் என்று தெரிந்தும், தராதரமற்றவன் என்று அறிந்தும் தன்னுடையதை தானாகவே மனமுவந்துக் கொடுப்பதாகும். இத்தகைய அன்பை தான் கிறிஸ்தவ சமுதாயம் அறிவிக்க வேண்டும். ஊழியத்துக்கானாலும் தங்களின் மனம் விரும்பி செயல்படுவதுதான் அன்பாகும். நான் அவரை அதிகமாய் நேசிப்பதினால் என்னை அவரின் பணிக்காய் தாரை வார்க்கின்றேன் என்பதாகும்.

ஒருவர் தனக்குரியதாக வைத்துக்கொண்டிருக்கும் ஒன்றை அவரிடமிருந்து பெற்றுக்கொள்ள துடிப்பதும், அதை பறித்துக்கொள்ள முயல்வதும் தெய்வீக அன்பின் பிரதிபலிப்பல்ல. அது இச்சையின் அன்பாகும். அதே நேரத்தில் கொடுக்கிறவன் தாமாகவே முன்வந்து செய்வாரென்றால் அது அன்பாகும்.

சபையானது அன்பை கொடுக்க கடன்பட்டுள்ளது. பிறரிடமிருந்து வாங்க அல்ல, கொடுக்கவே கடன் பட்டுள்ளது. வாங்குகிறதைப் பார்க்கிலும், கொடுக்கிறதே பாக்கியம். இதில் ஜாதிக்கோ, மொழிக்கோ, இனத்துக்கோ, நிறத்துக்கோ, ஐசுவரியத்துக்கோ இடமில்லை. வித்தியாசமான ஜாதியாராயிருந்தாலும் உயர்ந்த இடத்தில் இருக்கும் ஒருவர் தாழ்ந்த இடத்தில் இருக்கும் ஒருவருக்கு உதவ முன்வருவதே உன்னத அன்பாகும். இதில் எதை கொடுக்க வேண்டும் என்பதை கொடுப்பவரே தீர்மானிக்கின்றார். இதன் உண்மைகளை புரிந்துக் கொண்டவர்கள் ஜாதி, மொழி, பணம், கல்வி குறித்து பேசவே மாட்டார்கள். தேவன் எனக்கு தரவிரும்பாத ஒன்றை அவரிடமிருந்து வலுகட்டாயமாக – பலவந்தமாக பறித்துக்கொள்ள போராடுவது பாவமாகின்றது. அவர் தரவிரும்பாதவற்றிற்காக நான் துடிப்பது மிகப்பெரிய பாவம். அவர் எதைத் தருகிறாரோ அதைக்கொண்டு நான் முன்னேற உழைப்பதே சிறந்தது.

உயர்வான இடத்திலிருந்து கீழ்நோக்கி பாய்வதுதான் உன்னத அன்பு. கீழான இடத்திலிருந்து மேல்நோக்கி பார்க்க துடிக்கும் அன்பு கீழ்படிதலின் அன்பு. இதில் எத்தகைய அன்பில் நாம் இணைக்கப்பட்டுள்ளோம் என்று ஆராய்வோமாக.

இதினிமித்தம் நான் பரலோகத்திலும் பூலோகத்திலுமுள்ள முழுக்குடும்பத்துக்கும் நாமகாரணராகிய, நம்முடைய கர்த்தராயிருக்கிற இயேசுகிறிஸ்துவினுடைய பிதாவை நோக்கி முழங்கால்படியிட்டு, நீங்கள் அவருடைய ஆவியினாலே உள்ளான மனுஷனில் வல்லமையாய்ப் பலப்படவும், விசுவாசத்தினாலே கிறிஸ்து உங்கள் இருதயங்களில் வாசமாயிருக்கவும், நீங்கள் அன்பிலே வேரூன்றி, நிலைபெற்றவர்களாகி, சகல பரிசுத்தவான்களோடுங்கூடக் கிறிஸ்துவினுடைய அன்பின் அகலமும், நீளமும், ஆழமும், உயரமும் இன்னதென்று உணர்ந்து; அறிவுக்கெட்டாத அந்த அன்பை அறிந்துகொள்ள வல்லவர்களாகவும், தேவனுடைய சகல பரிபூரணத்தாலும் நிறையப்படவும், அவர் தமது மகிமையினுடைய ஐசுவரியத்தின்படியே, உங்களுக்கு அநுக்கிரகம் பண்ணவேண்டுமென்று வேண்டிக்கொள்ளுகிறேன். எபேசியர் 3:14-19.

ADD YOUR COMMENT

Powered By Indic IME