ஆவியானவர் புறாவைபோல வானத்திலிருந்து இறங்கி இவர்மேல் தங்கினார்

ஆவியானவர் புறாவைபோல வானத்திலிருந்து இறங்கி இவர்மேல் தங்கினார்…..

பின்னும் யோவான் சாட்சியாகச் சொன்னது: ஆவியானவர் புறாவைப்போல வானத்திலிருந்திறங்கி, இவர்மேல் தங்கினதைக் கண்டேன். (யோவான் 1:32)

யோவான் 1:33; மத்தேயு 3:16,17; மாற்கு 1:9,10; லூக்கா 3:21,22; மத்தேயு 12:18; லூக்கா 4;18; யோவான் 3;34; அப்போஸ்தலர் 10:38; ஏசாயா 11:1,2; ஏசாயா 42:1-4.

1. இயேசு என்றால் இரட்சகர்…..
கிறிஸ்து – மேசியா என்றால் அபிஷேகம் பண்ணப்பட்டவர் என்று பொருளாகும்…..

2. பழைய ஏற்பாட்டில் ஆவியானவர் இறங்கி எவர்மீதும் நிரந்தரமாக தங்குவதில்லை..
ஆனால் கிறிஸ்துவில் பழைய ஆவியானவர் இறங்கி தங்கினார்.
அதாவது அதற்குமுன் அவரில் ஆவி இல்லை என்று கூறலாகாது..
ஏனெனில் அவர் ஆவியினாலே பிறந்தவர். யோவான் 14:16; லூக்கா 1:35; 1 யோவான் 5:6…..

3. இது ஞானஸ்நானத்தினால் உண்டான விளைவு அல்ல..
தன்னை தேவ நீதிக்கு ஒப்புக்கொடுத்ததினிமித்தம் உண்டானது….

4. ஆவியானவ்ர் ரூபமில்லாதவர். ரூபமாக வெளிபபட்ட காரணம்…
யோவான் ஸ்நானனுக்கு இயேசுவை அடையாளம் காண்பிக்க.. மத்தேயு 3:14,15

5. தம்மை பின்பற்றுகிறவர்களுக்கு ப.ஆவியை கொடுக்கவே அவர் ஆவியை பெற்றவர் என்றாகிறார்.. லூக்கா 11:13; அப்போஸ்தலர் 2:33…..

6. சமநோக்கு நூல்களின்படி பழைய ஆவியானவர் இயேசுவை உபவாசத்திற்கும், வனாந்தரத்திற்கும், சாத்தானை ஜெயிப்பதற்கும் நடத்தினார்….

7. பழைய ஆவியானவர் இயேசுவை செழிப்புக்கு நேராக அல்ல..
உலகம் உய்வடைவதற்காக சிலுவைக்கு நேராக நடத்தினார்.. ஏசாயா 53:11,12….

8. விவிலியத்தின் வழுவாமையை புரிந்துக்கொள்ள நமக்கு ப.ஆவி வேண்டும்.. 2தீமோத்தேயு 3:16,17……

9. தேவனின் ஆழங்களை அறிந்துள்ளவரும் அவரே. 1 கொரிந்தியர் 2:10.
எனவே பிதாவை அடையாளம் காணவும் அவரின் நோக்கம் அறியவும் ப.ஆவி தேவை……

10. மாம்சத்தில் வந்த கிறிஸ்துவை அறிக்கை பண்ண இந்த ப.ஆவியானவர் நமக்கு தேவை.. 1யோவான் 3:3………

11. ஆவியானவர் நம்மை அபிஷேகம் பண்ணுவதும்,ஆவியானவர் நம்மில் நிரம்பி வாழ்வதும் வெவ்வேறானவைகள்
நிரம்புதல் அனைவருக்குமானது……
அபிஷேகம் சிலருக்கானது……

12. ப.ஆவியானவர் வெறும் வரங்களுக்கானவர் மட்டுமல்ல,
கிறிஸ்தவ வைராக்கிய வாழ்வுக்கும், பாவமில்லா தூய வாழ்வுக்கும், கனிகொடுத்தலுக்குமானவரும் கூட.
எபேசியர் 5:9; கலாத்தியர் 5:22-24.

ADD YOUR COMMENT

Powered By Indic IME